மாவீரர் துயிலும் இல்லத்தில் இம்முறை ‘சிறிதரன்’ விளக்கேற்றினால் கட்டாயம் அடிப்போம்!! – முன்னாள் போராளிகள் கடும் எச்சரிக்கை!!

தமிழரசுக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனுக்கு எதிராக பல வழிகளிலும் எதிர்ப்பு வலுத்துக்கொண்டு வருகின்றமையை காணக்கூடியதாகவுள்ளது.

புலிகளையும், மாவீரர்களை  வைத்து  அரசியல் பிழைப்பு  நடத்தும்   சிறிதரன் ஒரு போலி அரசியல்வாதி என மக்களும், போராளிகளும்  தெரிவிக்கிறார்கள்.

அந்த வகையில்,  புதிதாய் தொடங்கியிருக்கும்  “புனர் வாழ்ளிக்கப்பட்ட  தமிழ் விடுதலைப் புலிகள் கட்சி” யினரும் சிறிதரனுக்கு எதிராக கடும் விமர்சனங்களை முன்வைக்கிறார்கள்.

அவர்கள்  ஊடகங்களுக்கு அளித்த பேட்டியிலிருந்து…

• மாவீரர் துயிலும் இல்லத்தில்  விளக்கேற்றுவதற்கு சிறிதரன் மூன்று இலச்சம் பணம்கொடுத்தாரா? வெளிவரும் அதிர்ச்சி தகவல்கள்.

முன்னாள் போராளிகள், பொதுமக்கள், புலம்பெயர் தமிழர்கள், ஊடகங்கள்… என எல்லா தரப்பினருமே பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம்  சிறிதரன்  மீது  கடும்  விமர்சனங்கள்   முன்வைப்பதற்கு  காரணம் என்ன??

• கிளிநொச்சியில் எது நடந்தாலும் தன்னை கேட்டுதான் நடக்க வேண்டும் என்கின்ற ஒருவித அதிகார தோறணையில் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம்  சிறிதரன் செயல்படுவதாக  கடும்விமர்சனங்களை  முன்வைக்கிறார்கள் கிளிநொச்சி வாழ் மக்கள்.

அதாகப்பட்டது….“கிளிநொச்சியில் உள்ள தென்னைமரத்தில் இருக்கும் தேங்காய் கூட தன்னை கேட்டுத்தான் விழவேண்டும்” என்ற நிலைப்பாட்டில்  சிறிதரன் இருப்பதாக  முன்னாள் போராளிகள் கூறுகிறார்கள். அதிகாரிகள் கூட தன்னுடைய சொல்படிதான் நடக்கவேண்டும் என சிறிதரன் கட்டளை  இட்டுள்ளதாக   தெரிவிக்கின்றனர்.

• போராளிகளையும், மாவீரர்களையும் வைத்துக்கொண்டு சிறிதரன் போன்றவர்கள் இனிவரும் காலங்களில் அரசியல் செய்வதற்கு நாங்கள் கிளிநொச்சியில்  இடமளிக்க மாட்டோம் எனவும், என்ன நடந்தாலும் தாங்கள் விடப்போவதில்லை என சபதம் ஏற்றுள்ளார்கள் முன்னாள் போராளிகள்.

சரணடைந்த  12ஆயிரம் போராளிகளும் புலனாய்வு துறையினரின்  ஆட்கள் என சிறிதரன் கூறியதாகவும் விசனம்  தெரிவிக்கிறார்கள்.

“கிளிநொச்சி, விஷ்வமடு தேராவில் மாவீரர் துயிலும் இல்லம் அமைந்துள்ள உள்ள இராணுவ முகாமை சிறிதரனால் வெளியேற்றமுடியுமா?? என 06-11-2017 இல்  “புனர் வாழ்ளிக்கப்பட்ட  தமிழ் விடுதலைப் புலிகள் கட்சியினரால் நடத்தப்பட்ட  ஊடக சந்திப்பில்” முன்னாள் போராளி  ஒருவர் கேள்வி எழுப்பிய பிற்பாடு..,

உடனடியாக (06-11-2017 அன்றே) களத்தில் இறங்கிய சிறிதரன் குழுவினர்கள் இராணுவமுகாம் அமைந்துள்ள தேராவில் மாவீரர் துயில்லத்துக்குள்  நுழைந்து  தாங்கள்  சிரமதான பணிசெய்யப்போவதாக இராணுவத்தினரிடம் கூறியுள்ளர்கள்.

அனுமதியில்லாமல் போனால் இராணுவத்தினர்கள் தங்களை  வழிமறிப்பார்கள் என நன்கு தெரிந்துகொண்டு, அங்கு போய் இராணுவத்திருடன்  பேசிவிட்டு  அவற்றை படமெடுத்து பிரசுரித்து ஒரு நாடகத்தை அரகேற்றியுள்ளார்கள்.

இந்த மாதிரியான சிறிதரனின் போலிதனங்களை  தமிழ் மக்கள் தெளிவாக   அறிந்து வைத்திருப்பதால்தான்,   சிறிதரன் மீது மக்கள் அளவற்ற கோபத்தில் இருக்கிறார்கள்.

போலித்தனங்கள்   மூலம் சிலநேரம் தமிழர்களை வெற்றிகொள்ளலாம். ஆனால்,  அதை எல்லா காலத்திலும் தொடர்ந்து கடைபிடிக்க முடியுமா??

போலிவேசம் ஒருநாள்  கலைந்து போகும்.

பொதுவாக  பாராளுமன்னற உறுப்பினர்கள் எல்லோரும் தங்களுடைய சுகபோக வாழ்க்கையை அனுபவித்துக்கொண்டிருக்கும் கள்ளர்கள் கூட்டங்கள்  என  கடும்விமா்சனங்களை முன்னாள் போராளிகள் முன்வைக்கிறார்கள்.

மக்களும்  இதே எண்ணப்பாட்டில்   இருக்கிறார்கள்.

625.0.560.320.160.600.053.800.700.160.90