இனிமேல் அவர்களை காப்பாற்ற யாரும் இல்லை : சசிகலாவை சந்தோசத்தில் ஆழ்த்திய செய்தி..!!

பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் தண்டனை அனுபவித்து வரும் அதிமுக அம்மா அணியின் பொதுச்செயலாளர் சசிகலாவை, அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் தினகரன் நேற்று சந்தித்து பேசினார்.

அதற்கான ஏற்பாடுகளை கர்நாடக மாநில அதிமுக செயலாளரும் தினகரன் ஆதரவாளருமான புகழேந்தி செய்திருந்தார். அவரும் தினகரன் உடன் சென்றிருந்தார்.

தினகரனை பார்த்ததும் இரட்டை இலை சின்னம் குறித்த வழக்கு பற்றி கேட்பார் என்று நினைத்திருந்தவருக்கு அதிர்ச்சி தான் காத்திருந்தது.

பிரதமர் மோடி எதற்கு கோபாலபுரம் சென்றார்? என்று சசிகலா கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு கருணாநிதியை நலம் விசாரிக்க சென்றுள்ளார். வேறு காரணம் இல்லை என்று தகவல் வந்துள்ளது என்று தினகரன் கூறியுள்ளாராம்.

இருந்தாலும் அந்த தகவலை நம்ப முடியாது. மோடி காரியம் இல்லாமல் எதையும் செய்ய மாட்டார். நாடாளுமன்ற தேர்தலுக்கு கூட்டணி குறித்து அச்சாரம் போடுவதற்காக கூட இருக்கலாம்.

அப்படி திமுகவோடு கூட்டணி வைத்தால், எடப்பாடி தனித்து விடப்படுவார். ஆட்சிக்கு ஆபத்து வரும். ஆட்சி அதிகாரம் இருக்கும் வரை தான் எல்லோரும் அங்கே இருப்பார்கள்.

பிறகு வேறு வழியில்லாமல் நம்மிடம் தான் வரவேண்டும். இது நடந்தால் நமக்கு தான் சாதகமாக அமையும். எல்லாவற்றையும் உண்ணிப்பாக பார்த்துக்கொண்டிருக்கிறேன் என்றும் தினகரன் கூறியுள்ளாராம்.

அதற்கு, அப்படி நடந்தால் சந்தோசம் தான். எப்படியாவது எடப்பாடியை பாஜக விட்டாலே போதும் என்று சசிகலா பெரு மூச்சு விட்டதாக தினகரன் ஆதரவாளர்கள் பேசிக்கொள்கிறார்கள்.

sasikala_6_08498