இரு மாவட்டங்களுக்கு எச்சரிக்கை: தயார் நிலையில் இருக்குமாறு அறிவிப்பு

மழையுடன் கூடிய காலநிலை நீடித்து வரும் நிலையில் இரு மாவட்டங்களுக்கு தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.

அந்த வகையில் இரத்தினபுரி மற்றும் கேகாலை ஆகிய இரு மாவட்டங்களுக்கே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன், மழை தொடருமாயின் மக்களை குறித்த இடங்களில் இருந்து வெளியேற தயார் நிலையில் இருக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பை அனர்த்த முகாமைத்துவ நிலையம் விடுத்துள்ளதுடன், மண்சரிவு, பாறை விழுகை, நிலவெட்டு சாய்வு மற்றும் தரை உள்ளிறக்கம் போன்ற பாதிப்புக்கள் ஏற்படுவதற்கான சாத்தியம் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் நேற்று மாலை 6.30 மணியிலிருந்து இன்று மாலை 6.30 மணிவரையில் மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

landslide-warning1