முல்லைத்தீவில் அடர்ந்த காட்டிற்குள் மர்மமாக காணப்படும் மைதானம்!

முல்லைத்தீவில் அடர்ந்த பெருங்காட்டு பகுதியில் மர்மமான முறையில் மைதானம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நீண்டு வளர்ந்திருக்கும் காட்டு மரங்களின் நடுவே ஒரு வெட்டை வெளி பிரதேசமாக இந்த மைதானம் காணப்படுகின்றது.

ஒரு ஹெலிகொப்டர் தரையிறங்கக்கூடிய வகையில் இந்த மைதானம் அமைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

காட்டு விலங்குகளின் நடமாட்டம் அதிகமாக காணப்படும் இந்தப்பகுதிக்குள் பொதுமக்களின் நடமாட்டம் எதும் இல்லை. எனினும் இந்தப் பகுதிக்கு வேட்டைக்காரர்கள் சென்று வருகின்றனர்.

கடந்த காலங்களில் முல்லைத்தீவு மாவட்டத்தில் பாரிய யுத்தம் நடைபெற்ற போதும், குறித்த பகுதியில் இராணுவத்தினரோ விடுதலைப்புலிகளோ நிலை கொண்டிருந்த தடயங்கள் எதுவும் காணப்படவில்லை.

இந்நிலையில், குறித்த மைதானத்தை யார் எதற்காக நிர்மாணித்தார் என்பது மர்மமாக காணப்படுவதாக காட்டை அண்மித்த பகுதியில் வாழும் மக்கள் தெரிவித்துள்ளனர்.

Capturegvdfxgvgvgvgvgvgvgvgvgvgvgv Capturedxvfxdfc