பச்சிலைப்பள்ளிப் பிரதேசத்தின் புலோப்பளை பிரதான வீதியின் நிலையிது.
புலோப்பளைகிழக்கு, புலோப்பளை மேற்கு, அல்லிப்பளை, அறத்திநகர், பளை மத்தி போன்ற கிராமங்களின் பிரதான வீதியாகவும் காற்றாலை, மிருக வைத்திய சாலை, தும்புத்தொழிற்சாலை, முன்பள்ளி, பாடசாலைகள் போன்ற முக்கிய இடங்களிற்கான பயன்பாட்டு வீதியாகவும் பெரியபளை, கச்சார்வெளி, முல்லையடி, செல்வபுரம் போன்ற கிராமங்களின் உபவீதியாகவும் கடலுக்கான வீதியாகவும் காணப்படுகிறது.
பச்சிலைப்பள்ளிப் பிரதேசத்தின் முக்கிய வீதியை இதுவரை ஏன் பாராதிருக்கிறார்கள் என்ற காரணம் புரியவில்லை.
காற்றாலையிடமிருந்து வடமாகாணசபை பெறும் இடவாடகையை இப் பிரதான வீதிக்கு நினைத்திருந்தால் பயன்படுத்தியிருக்கலாமென்ற விடயத்தை கருத்தில் கொண்டு வருவதோடு பள்ளிமாணவர்கள், முதியவர்கள், கர்ப்பிணித்தாய்மார், உத்தியோகத்தரென அனைவருமே பல இன்னல்கள் மத்தியில் நீந்திக்கடக்கும் இவ் வீதி.
அனர்த்தங்களானபின் ஆற்றும் உரைகள் வடிக்கும் நீலிக் கண்ணீர்கள் பயன்தரா….