குழந்தையின் கழுத்தை வெட்டி கொடூர கொலை செய்த தாய்!

சுவிட்சர்லாந்தில் நோய்வாய்ப்பட்டிருந்த தனது குழந்தையை தாயார் வைத்தியசாலையிலிருந்து கடத்திச் சென்று ஸ்பெயின்  வைத்தியசாலையில் வைத்து கொலை செய்த வழக்கில் தாய்க்கு நீதிமன்றம் தண்டனை வழங்கியுள்ளது.

சொந்த குழந்தையையே கொடூரமாக கொலை செய்த குறித்த தாய்க்கு ஸ்பெயின் நீதிமன்றம் 11 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியுள்ளது.

Evening-Tamil-News-Paper_65615046025சுவிட்சர்லாந்தின் சூரிச் பகுதியில் குடியிருக்கும் குறித்த தாயின் ஒரு வயது குழந்தை ஹைட்ரோசிஃபலஸ் என்ற ஒருவகை நோயால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து தனது குழந்தையை சூரிச் பகுதியில் உள்ள வைத்தியசாலையில் அனுமதித்து சிகிச்சை வழங்கி வந்துள்ளார். இந் நிலையில் குழந்தைக்கு அறுவைசிகிச்சை செய்ய வேண்டும் என வைத்தியர்கள் பரிந்துரைத்துள்ளனர்.

ஆனால்  தாய் தனது குழந்தைக்கு  அலோபதி அல்லது இந்திய மற்றும் சீனா மருத்துவம் போதும் என அவர் அடம்பிடித்துள்ளார்.

இதனிடையே வைத்தியர்கள் குழந்தையை பரிசோதிக்க வேண்டும் என நிர்பந்தித்த நிலையில் தனது குழந்தையை குளிப்பாட்ட வேண்டும் எனக் கூறி குழந்தையுடன் அங்கிருந்து மாயமாகியுள்ளார்.

பின்னர் ஸ்பெயின் நாட்டுக்கு தலைமறைவான குறித்த பெண்னை சுவிஸ் பொலிஸார் சர்வதேச தேடுவோர் பட்டியலில் சேர்த்து தேடுதல் வேட்டையில் இறங்கினர்.

இந் நிலையில் கடந்த 2014ஆம் ஆண்டு ஸ்பெயின் நாட்டில் உள்ள Costa Blanca நகரில் குறித்த பெண்னை பொலிஸார் அடையாளம் கண்டு நடவடிக்கை எடுத்துள்ளனர்.

அங்குள்ள வைத்தியசாலை ஒன்றில் வைத்து குழந்தையுடன் சிக்கிய குறித்த பெண்  பொலிஸாரிடம் குழந்தையின் ஆடையை மாற்றிவிட்டு வருவதாக கூறி சென்று, கத்தியால் குழந்தையின் கழுத்தை துண்டித்து கொலை செய்துள்ளார்.

பின்னர் அவரும் தற்கொலைக்கு முயன்ற நிலையில் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளார்.குறித்த பெண்னை மீட்டு வழக்குப் பதிவு செய்து விசாரணைகள் இது வரை காலமும் நடாத்தப்பட்டு அவரின் குற்றம் நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து குறித்த பெண்ணிற்கு நேற்று 11 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி ஸ்பெயின் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.