காஷ்மீரில் அமைதியின்மையை உருவாக்குவதில் முக்கிய பங்கில் இருக்கும் பாகிஸ்தான் உடன் பேச்சுவார்த்தையை கடந்த 2016-ம் ஆண்டு முதல் இந்தியா நிறுத்திவிட்டது. பேச்சுவார்த்தையில் தீவிரவாதம் இடம் பிடிக்க வேண்டும் என இந்தியா கூறியது. ஆனால், காஷ்மீர் விவகாரம் பேச்சுவார்த்தையில் இடம்பெற வேண்டும் என்கிறது பாகிஸ்தான்.
இந்நிலையில், பாகிஸ்தான் உடனான பேச்சுவார்த்தை தொடர்பான கேள்விக்கு இந்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ராவீஷ் குமார் பேசுகையில், “பேச்சுவார்த்தை என்பதில் எங்களுடைய நிலைபாடு இப்போதும் தொடர்கிறது. பேச்சுவார்த்தை முன்நோக்கி செல்ல வேண்டும் என்பதே இந்தியாவின் நிலைபாடு, பேச்சுவார்த்தை நடைபெற உகந்த சூழ்நிலையானது இருக்க வேண்டும். தீவிரவாதம் இல்லாத மற்றும் தீவிரவாதத்திற்கு பாகிஸ்தான் உதவிசெய்யாத சூழ்நிலையை உருவாக்கவேண்டும்,” என கூறி உள்ளார்.
2016-ம் ஆண்டு பாகிஸ்தானை சேர்ந்த தீவிரவாதிகள் பதன்கோட் விமானப்படை தளம் மீது தாக்குதல் நடத்தியதும், பேச்சுவார்த்தையை இந்தியா நிறுத்திவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.