துருக்கியில் பெருமளவான மக்கள் கைது!

தக்ஃபிரீ டேஷ் பயங்கரவாதிகளுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் 101 பொதுமக்களை துருக்கி பொலிஸார் கைது செய்துள்ளனர்.

254 பேருக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நிலையில் இன்று தலைநகர் அங்காராவில் 250க்கும் மேற்பட்ட இடங்களில் ஒரே நேரத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது இவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டதாக உத்தியோகபூர்வ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

பொலிஸாரின் இந்த அதிரடி சோதனை நடவடிக்கை தொடர்பில் மேலதிக தகவல்கள் எவையும் வெளியாகவில்லை.

இவ்வாறிருக்க கடந்த சில வருடங்களில் 5 ஆயிரத்துக்கும் அதிகமான டேஷ் பயங்கரவாதிகளை கைது செய்ததுடன்95 நாடுகளைச் சேர்ந்த 3290 வெளிநாட்டு கிளர்ச்சியாளர்களை நாடுகடத்தியுள்ளதாக துருக்கிய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

துருக்கியில் சமீபத்தய ஆண்டுகளில் இடம்பெற்ற துப்பாக்கி மற்றும் குண்டுத் தாக்குதலுடன் டேஷ் தீவிரவாதிகள் தொடர்புபட்டுள்ளனர். நாட்டின் உள்துறை அமைச்சு வெளியிட்டுள்ள புள்ளிவிபரங்களின் அடிப்படையில் இவ்வாறான பெரும் தாக்குதல்களில் 300க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.

t1