பிக்பாஸ் நிகழ்ச்சி சில நாட்களுக்கு முன் ஹாட் டாப்பிக்காக ஓடிக்கொண்டிருந்தது. சிலருக்கு இது சவாலாக இருந்தது. தமிழில் முதலில் ஆரம்பமானாலும் உடனே தெலுங்கிலும் ஆரம்பிக்கப்பட்டது. போட்டி 70 நாட்கள் என்பதால் தமிழ் பிக்பாஸ்க்கு முன்பே அது முடிந்துவிட்டது.
ஜூனியர் என்.டி.ஆர் தொகுத்து வழங்கிய இந்நிகழ்ச்சியில் நடிகர் சிவபாலாஜி வெற்றி பெற்றார். தற்போது பிக்பாஸ் சீசன் 2 க்கான வேலைகள் இப்போதே அங்கு ஆரம்பித்துவிட்டதாம். அடுத்த வருடத்தில் பாதி நிகழ்ச்சியை முடித்துவிடவேண்டும் என பிளான் போட்டிருக்கிறார்களாம்.
இந்நிலையில் முதல் சீசன் வெற்றியாளரான சிவபாலாஜியின் மனைவியும் நடிகையுமான மதுமிதாவிடம் சீசன் 2 கலந்துகொள்ள கேட்டார்களாம். அவர் வேண்டாம் என வாய்ப்பை தவிர்த்துவிட்டாராம். இவர் இங்கிலிஷ்காரன், தூங்கா நகரம், பிரியாணி என சில படங்களில் நடித்துள்ளார்.