பெற்றோல் தட்டுப்பாடு: மாட்டு வண்டியில் பயணித்த மகிந்த அணியினர்
நாட்டில் தற்போது எரிபொருள் தட்டுப்பாடு நிலவிவரும் நிலையில் வடமேல் மாகாண சபையின் இன்றைய அமர்வில் கலந்துகொள்ள சில உறுப்பினர்கள் மாட்டுவண்டியில் சென்ற சம்பவம் பெருமளவானோரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
வடமேல் மாகாண சபையின் இந்த மாதத்திற்கான அமர்வு இன்று (7) செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதில் கலந்துகொள்வதற்காக ஒன்றிணைந்த எதிர்கட்சியின் சில உறுப்பினர்கள் பிரதான வீதியில் மாட்டு வண்டியில் பயணம் செய்து, மாகாண சபையை அடைந்துள்ளனர்.
எரிபொருள் தட்டுப்பாட்டினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உடனடி நடவடிக்கைகளை எடுக்குமாறு வலியுறுத்தியும், நல்லாட்சி அரசாங்கத்தை கடுமையாக விமர்சிக்கும் வகையிலாக எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறும் உறுப்பினர்கள் மாட்டுவண்டியில் பயணம் செய்தனர்.