சுவிட்சர்லாந்தில் பணியாற்ற காத்திருக்கும் வெளிநாட்டவர்களுக்கான பயனுள்ள தகவல் இதுவாகும்.
- Organization for Economic Cooperation and Development-ன் படி அமெரிக்கா, லக்சம்பெர்க்கை அடுத்து சுவிட்சர்லாந்தில் சம்பளம் அதிகம், ஏனெனில் ஐரோப்பாவை பொறுத்த வரையில் வாழ்வதற்கு அதிக விலையுயர்ந்த நாடுகளில் சுவிட்சர்லாந்தும் ஒன்றாகும்.
- ஆண்- பெண்களுக்கு இடையேயான சம்பள விகிதமும் இங்கு அதிகம், ஐரோப்பிய நாடுகளில் இங்கு தான் அதிகளவு வித்தியாசம் உண்டு. சமீபத்திய ஆய்வின் படி ஆண்களை விட பெண்களுக்கு 19.3 சதவிகிதம் குறைவான சம்பளமே வழங்கப்படுகிறது, குறிப்பாக சுவிட்சர்லாந்து பெண்களை விட வெளிநாட்டை சேர்ந்த பெண்களுக்கு சம்பளம் குறைவு.
- வருடத்திற்கு சுவிட்சர்லாந்தில் 20 நாட்கள் பொது விடுமுறை வழங்கப்படுகிறது, ஆகஸ்ட் 1ம் திகதி சுவிஸ் தேசிய தினத்தன்று அனைத்து மாகாணங்களிலும் விடுமுறை வழங்கப்பட்டாலும், மற்ற பொது விடுமுறைகள் மாகாணங்களை பொறுத்து வேறுபடுகிறது.
- சுவிட்சர்லாந்தில் வாழ்க்கை/பணி இரண்டுக்கும்மான Balance-யை சமமான முறையில் கொண்டு செல்ல முடியும், இதன் காரணமாகவே உலகளவில் வாழ்வதற்கு மிகச்சிறந்த நாடுகளின் பட்டியலிலும் இடம்பிடித்துள்ளது.
- சுவிசின் சட்டப்படி, நிறுவனம் தொழிலாளரை ஒரு வாரத்திற்கு 45 மணிநேரம் பணியாற்ற அழைக்கலாம், மற்ற நாடுகளுடன் ஒப்பிடும் போது இது அதிகம். பிரான்சில் வாரத்திற்கு 35 மணிநேரமும், பிரித்தானியாவில் 36.5 மணிநேரமும் பணியாற்றுகின்றனர்.
- ஒரு ஆண்டுக்கு வேலை செய்த பின்னர், வேலையை இழந்துவிட்டால் அவர்களுக்கு அதிகளவான சலுகைகள் கிடைக்கும், இதேபோன்று ஒரு நாளைக்கு எட்டு மணிநேரத்திற்கும் அதிகமாக பணியாற்றினால் குறித்த நிறுவனம் உங்களுக்கான விபத்து காப்பீட்டை செலுத்த வேண்டும்.
- கர்ப்பிணிகளுக்கு பிரசவத்திற்காக 14 வார சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்படுகிறது, தந்தைமார்களுக்கு பெரும்பாலும் குழந்தை பிறந்த அன்றைய தினம் மட்டும் விடுமுறை வழங்கப்படுகிறது, இதேபோன்று பணியாற்றும் தாய்மார்களாக இருப்பின் குழந்தை வளர்ப்புக்கும் அதிக தொகை செலவிட வேண்டும்.