வருமான வரித்துறை சோதனைகளுக்கு நடுவே டி.டி.வி.தினகரன் கோ பூஜை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இன்று காலை முதலே சசிகலா உறவினர்கள், ஆதரவாளர்கள் மற்றும் சசிகலா குடும்பத்தினர் வசம் உள்ள ஜெயா டிவி ஆகியவற்றில் வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது.
மேலும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா போயஸ் தோட்டம் கொடநாடு எஸ்டேட் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இத்தகைய சோதனையானது சுமார் 190க்கும் மேற்பட்ட இடங்களில் நடத்தப்பட்டு வருகிறது. இந்த அதிரடி சோதனை தான் தற்போது தமிழக அரசியலில் ஹாட் டாப்பிக்காக பேசப்படுகிறது.
இதற்கு மோடிதான் காரணம் என்று டி.டி.வி.தினகரன் ஆதர்வாளர்களிடையே பெரும் குற்றச்சாட்டாக வைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இது பா.ஜ.க அரசின் அடக்குமுறை என்று விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்டு உள்ளிட்ட கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.
தற்போது சென்னை பெசன்ட்நகரிலுள்ள டி.டி.வி.தினகரன் வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது. அதிகாரிகள் குழு வீட்டிற்குள் சோதனை மேற்கொண்டு வருகிறது.