இலங்கையில் ஒன்றரை வயது குழந்தையின் நிலை குறித்து பலர் கவலை வெளியிட்டுள்ளனர்.மர்மமாக உயிரிழந்த தாய்க்கு அருகில் கிடந்த ஒன்றரை வயது குழந்தையை பொலிஸார் நேற்று மீட்டுள்ளனர்.
அம்பலங்கொடை, இடம்தொட்ட பிரதேசத்தில் வீடொன்றில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.அம்பலங்கொடை, இடம்தொட்ட பிரதேசத்தின் வாடகை வீடொன்றில் வசித்த 22 வயதுடைய தாய் ஒருவரே இவ்வாறு மர்மமாக உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த பெண்ணின் தாயார் வழங்கிய தொலைபேசி அழைப்பிற்கு மகள் பதில் வழங்காமையினால் அவரை தேடி தாயார் சென்றுள்ளார்.
அவரது வீட்டிற்கு சென்று பார்க்கும் போது மகள் உயிரிழந்து கிடந்ததாகவும், அவரது குழந்தை உணவின்றி இரண்டு நாட்களாக தாய் அருகில் இருந்துள்ளார் எனவும் தெரிவித்துள்ளார்.சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ள நிலையில், சடலம் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.