பாரம்பரிய ரீதியான குறைபாடு காரணமாக தோல் பாதிப்பொன்றுக்குள்ளாகி உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த 7 வயது சிறுவன் ஒருவனது உயிரை மருத்துவர்கள் அவனுக்காக புதிய தோலை விருத்தி செய்து பொருத்தி காப்பாற்றியுள்ளனர்.
தோல் வண்ணத்துப் பூச்சிகளின் இற க்கை போன்று சேதமடையக் கூடிய ‘வண்ணத்துப்பூச்சி நோய்’ என அழைக்கப்படும் பாதிப்பால் தனது உடலிலுள்ள தோலில் 80 சதவீதத்தை இழந்து உயிராபத்தான கோமா மயக்கத்திற்குச் செல்லும் நிலைக்குத் தள்ளப்பட்ட ஹஸன் என்ற சிறுவனுக்கே மேற்படி முன்னோடி சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
சிரியாவை பிறப்பிடமாகக் கொண்ட அந்த சிறுவன் ஜேர்மனியில் தற்போது வசித்து வருகிறான்.
இந்நிலையில் அவனது உயிரைக் காப்பாற்ற போராடிய மருத்துவர்கள் அவனது உடலில் பாதிக்கப்படாத தோல் பகுதியொன்றை எடுத்து அந்தத் தோல் பகுதியிலிருந்த பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய மரபணுவில் சீராக்கத்தை மேற்கொள்ள அதனை இத்தாலிக்கு அனுப்பி வைத்தனர்.
இதனையடுத்து இத்தாலிய ஆய்வுகூடத்தில் புதிதாக விருத்தி செய்யப்பட்ட சீரமைக்கப்பட்ட தோலை அந்த சிறுவனு க்கு பொருத்துவதற்கு 2015 ஆம் ஆண் டில் அவனுக்கு இரு அறுவைச் சிகிச்சை கள் மேற்கொள்ளப்பட்டன.
தற்போது இந்த அறுவைச் சிகிச்சைகள் இடம்பெற்று இரு வருடங்களாகின்ற நிலையில், ஹஸன் தோலில் ஏற்பட்ட பாதிப்பு முற்றாக நீங்கி குணமடைந்துள்ளதாக அவனுக்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள் அறிவித்துள்ளனர்.
ஹஸன் தற்போது தனது நண்பர்களுடன் இணைந்து கால்பந்தாட்டம் உள்ளடங்க லான விளையாட்டுகளை எவ்வித சிரமமு மின்றி விளையாடி வருவதாகத் தெரிவிக் கப்படுகிறது.