போதை மருந்து விற்பனை! வாழைச்சேனையில் மாட்டிய மருத்துவரின் மகன்!!

வாழைச்சேனையில் வைத்தியரொருவரின் மகன் உட்பட மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

போதை மாத்திரை விநியோகம் மற்றும் திருட்டுச் சம்பவங்கள் போன்ற இரு வேறு சம்பங்களுடன் தொடர்புடைய மூவரே நேற்று முன்தினம் மாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸார் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்ட போது ஓட்டமாவடியில் மிக நீண்ட நாட்களாக குளிசை வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த வைத்தியரொருவரின் மகனிடம் இருந்து 120 போதை மாத்திரைகள் மற்றும் எட்டு கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளன.

இதேவேளை, வாழைச்சேனை பகுதியில் மீன்பிடி உபகரண கடையை உடைத்து திருடப்பட்ட ஐந்து இலட்சம் ரூபா பெறுமதியான வலைகள் மற்றும் பொருட்களுடன் வாழைச்சேனையைச் சேர்ந்த இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை, வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருவதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்.