சவால் விட்ட டிடிவி..! பா.ஜ.கவிற்கு ஷாக் கொடுத்த உளவுத்துறை

இதுதொடர்பாக ஒருமுறை சர்ச்சை எழுந்தபோது, ஜெயா தொலைக்காட்சி, அதிமுக ஆதரவு தனியார் தொலைக்காட்சி என்றே ஜெயலலிதா கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது

ஆரம்பம் முதல் சசிகலாவின் மேற்பார்வையில் அவரது உறவினர்களால் தான் ஜெயா டிவி நிறுவனங்கள் இயங்கி வருகின்றன.

சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா சிறைசென்ற பிறகு, டிடிவி தினகரன் மேற்பார்வையில் இளவரசியின் மகன் விவேக் இதை நிர்வாகம் செய்து வருவதாக கூறப்படுகிறது.

டிடிவி தினகரன் தலைமையில் இயங்கி வரும் அதிமுக அம்மா அணிக்கு முக்கிய பிரச்சார பீரங்கியாக ஜெயா டிவி இருந்து வருகிறது என்பது நமக்கு தெரிந்ததே..!

இதன்காரணமாகவே, முதல்வர் இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் ஆகியோர் தலைமையிலான அணிகள் இணைந்ததும், ஜெயா டிவி மற்றும் நமது எம்.ஜி.ஆர் நாளிதழ் ஆகியவற்றைக் கைப்பற்றப்போவதாக தீர்மானம் நிறைவேற்றினார்கள்.

அப்போதே தனியார் சொத்தான ‘ஜெயா டிவியை எப்படி கைப்பற்ற முடியும்? என்று கேள்விகள் எழுந்தன. முடிந்தால் கைப்பற்றிப் பாருங்கள் என்று டிடிவி தினகரனும் சவால் விட்டார்.

அதிமுக-வில் நடக்கும் குழப்பங்கள் அனைத்திற்கும் பாஜக-தான் காரணம் என்று பலர் மறைமுகமாகவும் பலர் நேரடியாகவும் கூறி வந்தனர்..

அதிமுக-வின் புகழேந்தி, தங்க.தமிழ்ச்செல் வன், வி.பி. கலைராஜன், சி.ஆர். சரஸ்வதி போன்றவர்கள் வெளிப்படையாக இக்குற்றச்சாட்டை வைத்தாலும் டிடிவி தினகரன் நேரடி யாக பாஜக-வை குற்றம் சாட்டுவதை விரும்பவில்லை, தவிர்த்து வந்தார்.

எனினும் இரட்டை இலை விவகாரத்தில், மோடி தங்களுக்கு உதவுவார் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி குறிப்பிட்டதையொட்டி, மீண்டும் அதுதொடர்பான விவாதங்கள் வீறுகொண்டு எழுந்தன.

சும்மா இருந்த வாய்க்கு, மெல்லுவதற்கு பீடா கிடைத்தது போல, இந்த விவகாரமும் ஒரு எட்டில் விமர்சிக்கபட்டன..

இதையே தனிப்புகாராக எலெக்க்ஷன் கமிஷனில் டிடிவி அணியினர் தாக்கல் செய்தனர். இரட்டை இலை சின்ன விவகாரத்தில் மோடியின் தலையீடு இருக்கிறது என்று குற்றம் சாட்டுவதாக அது இருந்தது, இங்கு உற்று நோக்கதக்கது.

இதனால் வரக் கூடிய எலெக்க்ஷனில் எடப்பாடி- ஓபிஎஸ் அணியுடன் பாஜக கூட்டணி அமைத்தாலும் பாதிப்பு ஏற்படும் என மத்திய உளவுத்துறையும் அறிக்கை அனுப்பியதாக கூறப்படுகிறது.

மறுபுறத்தில் ஜெயா டிவி-யில் வேலை பார்த்த சீனியர் ஒருவரை வழிக்குக் கொண்டுவந்த மாநில ஆட்சியாளர்கள், அதன்மூலம் ஜெயா டிவி-யின் பணப் பரிவர்த்தனை விவரங்களை கேட்டறிந்து அதனை மத்திய அரசுக்கு அனுப்பி வைத்ததாகவும் தகவல் வெளியாகிறது..

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடியின் பண மதிப்பு நீக்க நடவடிக்கை தொடர்பாக, பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டியளித்த டிடிவி தினகரன்,

பண மதிப்பு நீக்க நடவடிக்கை ஆரம்பத்தில் நல்ல நடவடிக்கையாக தெரிந்தாலும், அதனால் பாதிப்புதான் அதிகம் என்று திடீர் விமர்சனம் செய்யவே, இதுதான் சரியான டைம் என்று கருதிய சிலர், வருமான வரித்துறையை அதிரடியாக களத்தில் இறக்கி விட்டதாகவும் டிடிவி தினகரன் தரப்பினர் தெரிவிக்கின்றனர்.