சென்னை GST சாலை, மதுரவாயில் மேம்பாலம் மற்றும் தாம்பரம் பேருந்து நிலையத்தில் இரவு நேரங்களில் குறிப்பிட்ட பெண்கள் நடைபாதை மீது இரண்டிரண்டு பேராக அமர்ந்து கொண்டு அநாகரீக செயலில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவர்களுக்கு இடம் கொடுக்கும் வகையில் சில ஆண்களும் பேச்சு கொடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.
புறநகர் பகுதிகளில் இரவில் நடக்கும் அநாகரிகம். வெளிப்படையாக அழைக்கும் பெண்கள்
தாம்பரம் புறநகர் பேருந்து நிலையம் பொறுத்த வரையில் நூற்றுக்கணக்கான பயணிகள் இரவு 11 மணி வரை பேருந்துகளுக்கு காத்துக்கொண்டிருக்கும் சூழல் உள்ளது.
ஆண்களை காட்டிலும் அலுவலகம் முடிந்து வீட்டிற்கு புறப்படும் பெண்கள், இங்கு பேருந்திற்காக இந்த நிலையத்திற்கு வரவேண்டும்.
இந்நிலையில் கண் எதிரே இது போன்ற அநாகரீக நிகழ்வுகளை பார்க்கும் பொழுது எரிச்சலாக இருப்பதாகவும் அதே சமயம் பெண்களின் இந்த நிலையை குறித்து வேதனை அளிப்பதாகவும் பயணிகள் தரப்பில் கூறப்படுகிறது.
24 மணி நேரம் காவல் துறையினர் இந்த இடத்தில ரோந்து பணியில் இருந்தும் கூட இந்த சம்பவம் தொடர்ந்து நடைபெறுகிறது.
பயணிகள் நிற்கும் இடத்தில இப்பெண்கள் அமர்ந்து இது போன்ற செயலில் ஈடுபடுவதை காவல்துறை கண்காணித்து அவர்களை புறக்கணித்தால் நல்லதென சக பயணிகள் தெரிவிக்கின்றனர்.