நாட்டின் வடக்கு மற்றும் வட கிழக்கு திசைகளில் உள்ள கடல் பிரதேசங்களில் காற்றின் வேகமானது மணித்தியாலயத்திற்கு 70 தொடக்கம் 80 கிலோமீட்டராக அதிகரிக்க கூடும் என காலநிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
காலநிலை அவதான நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாயு கோளத்தில் தற்போது ஏற்பட்டுள்ள குழப்ப நிலை காரணமாக இவ்வாறு காற்று அதிகரித்த வேகத்தில் வீசும் என தெரிவிக்கப்படுகிறது.
இதன் காரணமாக கடற்றொழில் நடடிவக்கைகளில் ஈடுபடுபவர்கள் அவதானத்துடன் செயற்படுமாறு காலநிலை அவதான நிலையம் குறிப்பிட்டுள்ளது.