கடலுக்கு போய், மீன் கிட்ட பேசி நம்ம வழிக்கு கொண்டுவரும்.. அசத்தும் ரோபோ கண்டுபிடிப்பு- (வீடியோ)

ஜெனிவா: சுவிட்சர்லாந்தை சேர்ந்த நிறுவனம் ஒன்று மீன்களிடம் பேசும் ரோபோட் ஒன்றை கண்டுபிடித்து இருக்கிறது.
ஜெனிவாவில் இருக்கும் அந்த நிறுவனம் பல வருட ஆராய்ச்சிக்கு பின் இந்த கண்டுபிடிப்பை நிகழ்த்தி இருக்கிறது.
இந்த ரோபோட் மீன்களிடம் பேசம் திறனுடன் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. அதுமட்டும் இல்லாமல் மீன்களை திசை மாற்றவும் இந்த ரோபோட்கள் உதவும்.
இதை உருவாக்க ஐந்து வருடத்திற்கும் அதிமாக ஆகியதாக சுவிட்சர்லாந்த் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்த ரோபோட் இன்னும் சில நாட்களில் பயன்பாட்டுக்கு வரும் என்றும் கூறப்பட்டு இருக்கிறது.

10-1510315664-fishing-robotமீன்கார ரோபோட்

மீன்கார ரோபோட் சுவிட்சர்லாந்தை சேர்ந்த ‘எல்.எஸ்.ஆர்.ஓ’ என்ற நிறுவனம் கடந்த ஐந்து ஆண்டுகளாக தீவிரமாக மீன் பிடிக்கும் ரோபோட் ஒன்றை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்தது.

கடல் சார்ந்த ஆராய்ச்சிகளை அந்த நிறுவனம் அதிகம் செய்து வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் மீன்களுக்கு நண்பனாக இருக்கும் வகையிலும், மனிதர்களுக்கும் உதவவும் ஒரு ரோபோட் ஒன்றை உருவாக்க முடிவு செய்தது.

aa-Cover-5sb6llq6a2miueikig1oeb2lb2-20171109153204.Medi

ரோபோட் பழக்கப்படுத்தப்பட்ட விதம்

ரோபோட் பழக்கப்படுத்தப்பட்ட விதம் இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு அந்த ரோபோட்டை முழுமையாக வடிவமைத்து அந்த நிறுவனம் சாதனை புரிந்தது.

இந்த ரோபோட் கடந்த சில மாதங்களாக தண்ணீருக்குள் விட்டு அதோடு கடல்குதிரை மீனையும் அந்த தண்ணீரில் விட்டு சோதனை செய்தனர்.
இந்த சோதனை தினமும் செய்யப்பட்டது. ஆர்டிபிசியால் இண்டலிஜென்ஸ் மூலம் இயங்கும் அந்த ரோபோட் கொஞ்சம் கொஞ்சமாக அந்த மீனின் குணங்களை படிக்க ஆரம்பித்தது.

x10-1510315690-fishes-swim-faster-if-given-alcohol-zebrafish4-600.jpg.pagespeed.ic.VBmnBktKN0

எந்த மாதிரி செயல்படும்
இந்த ரோபோட் மிகவும் சிறியதாக மீன் வடிவத்திலேயே இருக்கும். மீன்களை மிகவும் எளிதில் ஏமாற்றும் வகையில் அந்த ரோபோட் இருக்கும்.
மேலும் அதில் இருக்கும் சோலார் மின்சாரம் மூலம் இயங்கக் கூடிய மோட்டார்கள் மீன்களை போல அவற்றை நீந்த வைக்கும். மேலும் அதில் இருக்கும் டிரான்ஸ்மிட்டர் நமக்கு தொடர்ந்து தகவல்களை அனுப்பிக் கொண்டே இருக்கும்.

10-1510315700-fishes-swim-faster-if-given-alcohol-zebrafish-600

இந்த ரோபோட் கடலுக்குள் சென்று நாம் தெரிவிக்கும் தகவலைகளை மீன்களுக்கு புரியும்படி மாற்றிக் கொடுக்கும்.
மேலும் மீன்களை அதன் வழியில் இருந்து மாற்றவும், தேவையான இடங்களில் நிறைய மீன்களை ஒன்றாக சேர்க்கவும் இந்த ரோபோட்களால் முடியும்.
இது கடல்சார்ந்த ஆராய்ச்சிகளில் பெரிய மைல்கல்லாக இருக்கும் என கூறப்படுகிறது. இந்த ரோபோட் கடலுக்குள் சென்று நாம் தெரிவிக்கும் தகவலைகளை மீன்களுக்கு புரியும்படி மாற்றிக் கொடுக்கும்.

மேலும் மீன்களை அதன் வழியில் இருந்து மாற்றவும், தேவையான இடங்களில் நிறைய மீன்களை ஒன்றாக சேர்க்கவும் இந்த ரோபோட்களால் முடியும். இது கடல்சார்ந்த ஆராய்ச்சிகளில் பெரிய மைல்கல்லாக இருக்கும் என கூறப்படுகிறது.