நள்ளிரவில் சாலை ஓரத்தில் நின்று லாரியை மறித்த பெண்கள்: டிரைவருக்கு காத்திருந்த அதிர்ச்சி.!!

பெண் வேடமிட்டு லாரியை மடக்கி டிரைவரிடம் கொள்ளையடித்த நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

large_00se6e9e-1713கடந்த மாதம் சுந்தரலிங்கம் என்பவர் லாரியில் சரக்கு ஏற்றிக்கொண்டு திருச்சியில் இருந்து மதுரை நோக்கி புறப்பட்டார்.

நள்ளிரவு 12 மணி அளவில், மணப்பாறை அருகே, சாலையின் ஓரத்தில் நின்று கொண்டு மூன்று பெண்கள் லாரியை மறித்தனர்.

இரவு நேரத்தில் மூன்று பெண்கள் சாலையில் நின்று கொண்டிருந்ததால், இரக்கப்பட்ட டிரைவர் சுந்தரலிங்கம் லாரியை நிறுத்தி இருக்கிறார்.

லாரியை நிறுத்திய சுந்தரலிங்கத்திற்கு அதிர்ச்சியை காத்திருந்தது. அந்த மூவரும் பெண்கள் இல்லை. பெண்கள் வேடம் அணிந்திருந்த ஆண்கள் என்பது அவருக்கு தெரிந்தது.

டிரைவர் சுந்தரலிங்கம் சுதாரிப்பதற்குள்.. அந்த மூவரும், அவரை கட்டிப்போட்டு விட்டு கத்தி முனையில் ரூபாய் 37ஆயிரத்தை கொள்ளை அடித்து சென்றனர்.

இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த மணப்பாறை போலீசார், கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில், நேற்று திருச்சியில் போலீசார் வாகன சோதனை நடத்திக்கொண்டிருக்கும் போது, வாகனத்தில் வந்த மூன்று நபர்களை விசாரித்துள்ளனர்.

அப்போது, அவர்கள் சந்தேகம் அளிக்கும் வகையில் பதில் சொன்னதால், ஸ்டேஷனுக்கு கொண்டு சென்று போலீசார் விசாரித்தனர்.

போலீசாரின் விசாரணையில், அவர்கள் மணப்பாறையில் நடந்த நெடுஞ்சாலை வழிப்பறியில் ஈடுபட்டவர்கள் என தெரிவந்தது.

அதனையடுத்து அவர்களை மணப்பாறை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

அவர்கள் மூன்று பேரையும் கைது செய்த போலீசார் நீதிபதி முன் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.