எப்போதும் இல்லாத அளவு நவம்பர் 10-ன் வெப்பநிலை ரொறொன்ரோவின் 44வருட சாதனையை முறியடித்துள்ளது.
பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில் வெப்பநிலை காலை 8மணிக்கு – 9.8 C ஆக விழ்ச்சியடைந்துள்ளது. 1983ல் – 8.9 C ஆக இருந்த சாதனையை இன்றய வெப்பநிலை முறியடித்துள்ளது.
இந்த வெப்பநிலை காலை அவசர நேரத்தில் குளிர் காற்றுடன் கூடி மிகவும் குளிராக – 15 ற்கு நெருக்கமாக உணரப்பட்டது.
நற்செய்தி என்னவென்றால் வெப்பநிலை நாள் முழுதம் முன்னேற்றமடையும் ஆனால் சிறிதளவு மட்டுமே.
அதி உயர்வாக – 2 C.என கனடா சுற்று சூழல் தெரிவிக்கின்றது.