ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின், காலி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக, பியசேன கமகே நேற்று பதவியேற்றுக் கொண்டார். சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று சபாநாயகர் கரு ஜெயசூரிய முன்பாக அவர் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.
காலி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த கீதா குமாரசிங்கவை சிறிலங்கா உச்சநீதிமன்றம் தகுதியிழப்பு செய்திருந்தது.
இந்தநிலையில், அவருக்கு அடுத்ததாக விருப்பு வாக்குகளைப் பெற்றிருந்த பியசேன கமகே புதிய உறுப்பினராக நாடாளுமன்றம் சென்றுள்ளார்.