உலகின் மிகப்பெரிய வாழை மரம்: அபூர்வ தகவல்கள் (வீடியோ)..

தென்னை, பனை மரங்களில் ஏறுவது போலத் தான் இந்த வாழை மரங்களில் ஏற வேண்டும். சாதாரண வாழை மரங்களைப் போல் அல்லாமல் உறுதியானவை இந்த வாழை மரங்கள்.

ஒரு வாழைப்பழம் ஒரு குடும்பத்துக்கே போதுமானது
இந்த வாழைப்பழங்களை உண்பதற்கு மூன்று அல்லது ஐந்து ஆண்டுகள் காத்திருக்க வேண்டும் என்பது தான் இங்கே விசேடம்.

பாப்புவா நியூ கினி என்னும் நாட்டில் உள்ள போசவி கிரேட்டர் என்னும் அடர்ந்த மலைப்பகுதியில் மிகவும் உட்புறமாக உள்ள அடர்ந்த காட்டுப் பகுதியில் உலகிலேயே பெரிய வாழைமரங்கள் காணப்படுகின்றன. இவை காட்டு வாழைகள் வகையைச் சார்ந்தவை.

மலேசியா, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், பாப்புவா நியூ கினியா நாடுகளில் காட்டு வாழைகளைக் காணலாம். இதில் பாப்புவா நியூ கினியா நாட்டில் காணப்படுவதுதான் பெரிய வாழை இனமாகும் .

மிகவும் அபூர்வ உயிர் இனங்கள் நிறைந்த போசவி கிரேட்டர் என்னும் இப்பகுதி ஆராய்சியாளர்களுக்கும் சுற்றுலா பயணிகளுக்கும் அருமையான இடம்.

இப்பெரிய மரத்தின் வாழை இலை ஐந்து மீட்டர் நீளமுடையது ஒருமீட்டர் அகலமுடையது என்றால் பாத்துக்கொள்ளுங்கள்! மரம் எவ்வளவு பெரியதென்று !

பதினைந்து மீட்டர் உயரம் கொண்ட இம்மரம் மேல்நோக்கி இருக்கும் இலையோடு இருபது மீட்டர் உயரம் இருக்கும் .வாழைமரத்தின் அடிப்பகுதி கிட்டத்தட்ட ஒரு மீட்டர் விட்டம் உடையதாக இருக்கும் .

இந்தவகை வாழை இலைகளைத் தற்காலிகமாகத் தாங்கும் குடிசைகளுக்கு [Completed Hunting Camp] மேற்கூரையாகப் பயன்படுத்துவார்கள்.

சுற்றுலாப் பயணிகளும் ஆராய்ச்சியாளர்களும் இந்தத் தற்காலிக இருப்பிடங்களைப் பயன்படுத்துவர் .” Jeff Daniells ” ஏன்னு ஆராய்ச்சியாளர் இவ்வகை வாழை மரங்களைக் கண்டு வெளிஉலகிற்குக் கொண்டுவந்தார் அதுவரையிலும் இங்கு இருந்த பழங்குடியினர்பற்றியும் வெளிஉலகிற்கு அவ்வளவாகத் தெரியாது .

இந்தவகை காட்டு வாழை மரங்களை ஆங்கிலத்தில் ” Musa ingens ” என்று அழைக்கிறார்கள். பாப்புவா நியூ கினி, போசவி கிரேட்டர் என்னும் அடர்ந்த மலைப்பகுதியில் உள்ள அடர்ந்த காட்டுப் பகுதியில் இந்தவகை வாழை மரங்கள் வளர்கின்றன.

நம்மை சுற்றி காணக்கூடிய மற்ற வாழை வகைகளில் இருந்து மாறுபடும், பப்புவாவின் மிகப்பெரிய வாழை மரம் வனப்பகுதியில் மட்டுமே காணப்படும். இப்போது வரை, இந்த வாழை இனங்களை சாகுபடி செய்வது மிகவும் கடினமாக உள்ளது.

இந்த மரங்கள் பழங்களைத் தர நீண்ட காலம் பிடிக்கிறது. [மூன்று ஆண்டுகள் முதல் ஐந்து ஆண்டுகள் வரை ] அதனால் இந்த காட்டு வாழைப் பழங்கள் மிகவும் அபூர்வமாகக் கருதப்படுகின்றன.

அடர்ந்த காட்டுப்பகுதியில் பழங்களைக் கண்டுபிடிக்கவும் கடினமாக இருக்கிறது. [பறவைகள் விலங்குகள் உண்டது போக மீதி ] ஆகவே இந்த, உலகிலேயே மிகப்பெரிய பழங்களைத் தரும் உலகிலேயே பெரிய வாழை மரமானது வாழைப்பழ பிரியர்களுக்கு மிகவும் அபூர்வமான ஒன்றாக விளங்குகிறது .

பாப்புவா நியூ கினி நாட்டின் இந்த விந்தையான காட்டு வாழை மட்டுமல்லாது விந்தையான தாவரங்கள், அபூர்வ விலங்குகள், விந்தையான பழங்குடியினத்தவர் கலாச்சாரம்,நெஞ்சை நிறைவிக்கும் இயற்கை அழகு என்று சுற்றுலா பயணிகளுக்கும் ஆராய்ச்சியாளர்களுக்கும் சுவர்க்கபுரியாகத் திகழ்கிறது.

எம்மோடு பின்னிப் பிணைந்த வாழைகளை கொண்டாடுவோம். வரலாறுகளை பாதுகாப்போம்.