தாயும், மகளும் திருமணம் செய்து கொண்ட நிலையில் சட்டவிரோத செயலை செய்ததற்காக மகளுக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் Oklahoma மாகாணத்தை சேர்ந்தவர் பேட்ரிசியா (44), இவருக்கு மிஸ்டி (26) என்ற மகள் உள்ளார். இது தவிர இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.
மிஸ்டி சிறுவயதிலிருந்தே தனது பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்த நிலையில் கடந்த 2014-ல் தாய் பேட்ரிசியாவுடன் சேர்ந்துள்ளார்.
இந்நிலையில், தாய்- மகளுக்குள் முறையற்ற உறவு உண்டான நிலையில் பேட்ரிசியாவும், மிஸ்டியும் கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.
Oklahoma மாகாண சட்டப்படி இது தவறு என்பதால் பொலிசார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தினார்கள்.
இதில் பேட்ரிசியா ஏற்கனவே தனது மகனை கடந்த 2008-ல் திருமணம் செய்துள்ளது தெரியவந்தது.
இது நடந்து 15 மாதத்துக்கு பின்னர் தாயுடன் நடந்த திருமணம் செல்லாது என அறிவிக்க கோரி மகன் வழக்கு தொடர்ந்ததும் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், பேட்ரிசியாவுடன் தனக்கு நடந்த திருமணத்தை ரத்து செய்யும் படி மிஸ்டியும் கடந்த மாதம் கோரியிருந்தார்.
இவ்வழக்கு குறித்து விசாரித்த நீதிமன்றம் மிஸ்டியின் நன்னடத்தையை அடுத்த 10 ஆண்டுகள் சோதிக்க உத்தரவிட்டுள்ளது.
அதற்குள் அவர் மீண்டும் தவறு செய்தால் சிறை தண்டனை அனுபவிக்க நேரிடும், பேட்ரிசியா மீதான விசாரணை ஜனவரி மாதத்துக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
Oklahoma மாகாண சட்டப்படி நெருங்கிய உறவுக்குள் திருமணம் செய்தால் பத்தாண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்பட கூட வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.