பிரான்சின் டுலூஸ் நகரின் அருகே அமைந்துள்ள கல்லூரிக்கு வெளியே மாணவர்கள் மீது நபர் ஒருவர் காரை மோதவிட்டு தாக்குதல் நடத்தியதில் மூன்று மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.
பிரான்சின் தென் மேற்கு பகுதியில் அமைந்துள்ள டுலூஸ் நகரில் குறித்த சம்பவம் நடந்துள்ளது.
இதில் 23 வயது மதிக்கத்தக்க இளம்பெண் படுகாயத்துடன் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
வேறிருவர் ஆபத்துகட்டத்தை தாண்டியுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
குறித்த விபத்து தொடர்பில் 28 வயதான வாகன ஓட்டுனரை பொலிசார் கைது செய்துள்ளதாக கூறப்படுகிறது. கைதான நபர் மீது ஏற்கனவே குற்றவியல் வழக்கு எதுவும் இல்லை என்ற போதும் சிறு வாகன விபத்து சம்பவங்களில் தொடர்புடைய நபர் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் சிக்கிய மூவருமே சீன வம்சாவளியினர் என்று கருதப்படுகிறது. கடந்த வாரத்தில் பிரான்சில் உள்ள சீனர்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என அந்த நாடு கேட்டுக்கொண்டிருந்தது.
முன்னதாக 40 சீன சுற்றுலா பயணிகள் மீது கண்ணீர் வாதகம் பீச்சி, அவர்களை ஒரு கும்பல் கொள்ளையிட்டு சென்றதன் பின்னணியிலேயே சீனா அரசாங்கம் பாதுகாப்பு கோரிக்கையை முன்வைத்தது.
கடந்த ஆகஸ்டு மாதம் 27 சீன சுற்றுலா பயணிகள் மீது 6 பேர் கொண்ட கும்பல் தாக்குதல் நடத்தியதுடன் கொள்ளையிட்டு சென்றுள்ள சம்பவம் பரபரப்பாக பேசப்பட்டது.