106 நோயாளிகளை கொலை செய்த தாதி கூறும் காரணம்

ஜேர்மனியைச் சேர்ந்த தாதி ஒருவர் தனக்கு அலுப்பு தட்டியதால் விஷ ஊசி போட்டு வைத்தியசாலையிலிருந்த 106 நோயாளிகளை கொலை செய்துள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

ஜேர்மனியைச்  சேர்ந்த 41 வயதுடைய  நீல்ஸ் ஹோகெல் எனும் குறித்த தாதி  2005 ஆம் ஆண்டு ப்ரேமென் நகரில் உள்ள ஒரு வைத்தியசாலையில்  வேலை செய்த போது தேவையில்லாமல் ஒரு நோயாளிக்கு விஷ ஊசியை செலுத்த முயற்சித்துள்ளார். அதை அந்த வைத்தியசாலையில் பணியாற்றும் மற்றொரு தாதி இதுகுறித்து  பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

கிடைக்கப் பெற்ற முறைப்பாட்டிற்கமைய பொலிஸார் விசாரணை நடாத்தியதில் ப்ரேமென் நகர் வைத்தியசாலையில் 2 நோயாளிகளை கொலை செய்துள்ளது தெரிய வந்துள்ளது.

மேலும் 4 நோயாளிகளை அங்கு அவர் கொலை செய்ய முயற்சித்தும் கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து நீல்ஸ் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

2008 ஆம் ஆண்டு நீதிமன்றத்தில் அவருக்கு ஏழரை வருடம் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

Capturehbgmjbn jmhbnநீல்ஸ் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்திய பொலிஸாருக்கு  பல்வேறு அதிர்ச்சி தரக்கூடிய தகவல்கள் தெரிய வந்துள்ளன.

இதுவரை அவரால் 106 பேர் கொலை செய்யப்பட் டுள்ளனர் என்றும் உயிரிழப்புகள் அதிகரிக்கலாம் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து நீல்ஸ் கூறுகையில், “உடல் உறுப்புகள் செயல் இழக்கக்கூடிய ஊசியை நோயாளிகளுக்கு செலுத்தி, பின்னர் அவர்களை காப்பாற்றினால் எனக்கு நல்ல பெயர் கிடைக்கும் என்ற நோக்கில் ஆரம்பித்தேன். மற்றவர்களிடமும் நல்ல பெயர் கிடைக்கும். பின்னர் அலுப்பு தட்டியதால்  இதுவே பழக்கமானது” என  தெரிவித்துள்ளார்.