புதிய முறையில் காதலைச் சொன்ன சீன இளைஞர்!

காதலைச் சொல்வதற்கு எத்தனையோ வழியிருக்க, சீன இளைஞர் ஒருவர் புதிய முறையில் காதலைச் சொல்லி சம்மதம் வாங்கியிருக்கிறார். அதற்கு அவர் பயன்படுத்தியது 25 ஐபோன் எக்ஸ் கைபேசிகளை!

கைபேசி விளையாட்டு வடிவமைப்புத் துறையில் இருக்கும் இந்த இளைஞர், நீண்ட நாட்களாக ஒரு பெண்ணைக் காதலித்து வந்துள்ளார். அவரிடம் சம்மதம் கேட்க நினைத்த அவர், சற்று வித்தியாசமான முறையில் அதைச் செய்ய நினைத்தார்.

Capturejgyhjgyhஅதன்படி, அழகானதொரு பின்னணியில், ரோஜாப் பூ இதழ்களின் மேலே அப்பிள் நிறுவனத்தின் புத்தம் புதிய வெளியீடான ஐபோன் எக்ஸ் கைபேசிகள் 25ஐ நண்பர்களின் உதவியுடன் இதயத்தின் வடிவில் ஒழுங்குபடுத்தி, நடுவில் திருமண மோதிரத்தைக் காட்சிப்படுத்தியிருந்தார்.

பின் தன் காதலியை அழைத்து வந்து தனது கோரிக்கையைக் ‘காட்டினார்’!

வித்தியாசமான இந்த முயற்சி கைமேல் பலன் அளித்திருக்கிறது அந்த இளைஞருக்கு! அவரது காதலி அவ்விளைஞரைத் திருமணம் செய்துகொள்ளச் சம்மதித்து விட்டார்.

தானும் தன் காதலியும் கைபேசி விளையாட்டுக்களின் மீது அதிக ஆர்வம் கொண்டவர்கள் என்றும், அதனாலேயே ஐபோனைப் பயன்படுத்தியதாக அவ்விளைஞர் கூறியுள்ளார். மேலும் தனது காதலியின் வயதைக் குறிக்கும் முகமாகவே 25 போன்களைப் பயன்படுத்தியதாகவும் தெரிவித்துள்ளார். இதற்காக அவர் செலவிட்டிருக்கும் தொகை, இலங்கை மதிப்பில் ‘வெறும்’ அறுபது இலட்சம் மட்டுமே!

என்னதான் இருந்தாலும் பெருந்தன்மையான மனம் அந்த இளைஞருக்கு! 25 ஐபோன்களையும் தனது திருமணம் கைகூட உதவிசெய்த நண்பர்களுக்கு இலவசமாக வழங்கிவிட்டாராம்!