லண்டன், கென்ட், கிழக்கு சசெக்ஸ், லங்காஷயர், எசெக்ஸ் மற்றும் கிளாஸ்கோ ஆகிய பகுதிகளுக்கான ரயில் வழித்தடங்கள் மூடப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
எனவே, கிறிஸ்மஸ் காலங்களில் போக்குவரத்து தடங்கல்களை எதிர்நோக்குவதை தவிர்த்துக் கொள்வதற்காக முன்கூட்டியே பயணங்களை திட்டமிடுமாறு பயணிகளுக்கு அறிவுத்தப்பட்டுள்ளது.
200இற்கும் அதிகமான ரயில் தண்டவாளங்கள் திருத்தப்பட வேண்டியுள்ள நிலையிலேயே இவ்வறிவிப்பு வெளியாகியுள்ளது.
அந்தவiயில், மத்திய லண்டன் ரயில்வே முனையமான லண்டன் பட்டிங்டன் ரயில் நிலையமானது, கிறிஸ்மஸ் தினத்திற்கு முதல் நாள் முதல் 27ஆம் திகதிவரை நான்கு தினங்களுக்கு மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ரயில் போக்குவரத்தினால் ஏற்படும் இடையூறுகளை தவிர்க்கும் வகையில் மேலதிக பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.