இந்தியப் பெண் போராளிக்கு டூடுள்! கூகுள் நிறுவனம் அசத்தல்!

இந்திய தொழிற்சங்கத் தலைவர் அனசுயா சாராபாய் அவர்களின் 132-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.  அவருக்கு சிறப்பு சேர்க்கும் வகையைில், இன்று கூகுள் நிறுவனம்தனது முகப்புப் பக்கத்தில் டூடுள் வெளியிட்டுள்ளது.

கூகுள்

11.11.1885-ம் ஆண்டு பிறந்தவர் அனசுயா சாராபாய். குழந்தைப்பருவத்திலேயே தாய்-தந்தையை இழந்தார். 13 வயதிலேயே திருமணம் நடைபெற்றது. மணவாழ்க்கையும் அவருக்கு சரியாக அமையவில்லை. அவரது சகோதரர் உதவியால், 1912ல் லண்டனுக்கு மருத்துவம் பயிலச் சென்றார். 1913-ம் ஆண்டிலேயே லண்டனில் இருந்து இந்தியா திரும்பிய அவர், இந்தியாவில் பெண்கள்நிலை மிகவும் மோசமாக இருப்பதை உணர்ந்தார். பெண்கள் மற்றும் ஏழைகள் நலனுக்காகப் போராடத் தொடங்கினார். 1914ல் ஜவுளித் தொழிலில் ஈடுபட்ட பெண்களுக்குக் குறைந்த ஊதியம் கொடுப்பதை எதிர்த்துப் போராடினார். இதனால், 50 சதவிகிதம் அவர்களுக்கு கூலி உயர்வு கிடைத்தது. இந்தியாவின் மிகப் பழைமையான துகில் தொழிலாளர்களின் சங்கமான ‘அகமதாபாத் ஜவுளித் தொழிலாளர்கள் சங்கம்’ என்னும் கூட்டமைப்பை 1920ல் உருவாக்கினார். இதனால், அனுசுயா சாராபாய் இந்தியாவின் பெண்கள் தொழிலாளர் இயக்கத்தின் முன்னோடியாகத் திகழ்ந்தார். மகாத்மா காந்தியின் நன்மதிப்பைப் பெற்று, அவருடம் நட்புக்கொண்டவர். 1972ல் இயற்கை  எய்தினார்.