உலகின் பிரபலமான முன்னணி ஆன்லைன் விற்பனை நிறுவனமான அலிபாபா 3 நிமிடத்தில் ரூபாய் 10,000 கோடி மதிப்புள்ள பொருட்களை விற்று சாதனை படைத்துள்ளது.
சீனாவில் ‘சிங்கிள்ஸ் டே’ ,சீன மொழியில் கவுன்கன் ஜி என்ற தினம் ஆண்டுதோறும் நவம்பர் 11 ஆம் திகதி கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த தினத்தில் சீன மக்கள் தாங்கள் சிங்கிளாக இருப்பதை நினைத்து பெருமை கொள்ளும் வகையில் அதனை சிறப்பாகக் கொண்டாடி வருகிறார்கள்.
இந்த தினத்தில் நண்பர்களுடன் இணைந்து பொருட்கள் வாங்குவது, விருந்தில் பங்கேற்பது என பல கொண்டாட்டங்கள் இடப்பெறும். இதனையொட்டி சீனாவின் பிரபல ஆன்லைன் விற்பனை நிறுவனமான அலிபாபா நிறுவனம் விற்பனையை அறிவித்தது.
இந்தச் சிறப்பு விற்பனை அறிவிக்கப்பட்டு மூன்று நிமிடத்தில் மட்டும் 10,000 கோடி மதிப்பிலான பொருட்கள் ஆன்லைனில் விற்பனை செய்து சாதனை படைத்துள்ளது.