தமிழகத்தின் முதல்வராக கமல்ஹாசன்…! பிரபல ஜோதிடர் கணிப்பு!

நடிகர் கமல் அரசியலுக்கு வருவதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறார். இதற்காக தனது ரசிகர்கள் மற்றும் நெருக்கமானவர்களிடம் ஆலோசனை நடத்தி வருகிறார்.

கமலின் அரசியல் பிரவேசத்திற்கு பல்வேறு தரப்பினர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் பிரபல ஜோதிடர் ராடான் பண்டிட் கமலுக்கு தமிழகத்தின் முதல்வராகும் யோகம் உள்ளது என கூறி உள்ளார்.

இது குறித்து அவர் கூறும்போது, கமல்ஹாசனின் ஜாதகம் மிகவம் அற்புதமாக ஜாதகம். அவர் மட்டும் அரசியலுக்கு வந்தால் எதிர்கட்சிகளை விட மிகவும் செல்வாக்கு பெற்று விடுவார்.

அவரின் ஜாதகம் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரை போல உள்ளது. எம்.ஜி.ஆர் மிகச்சிறந்த நடிகர் மட்டும் இன்றி சிறந்த ஆட்சியாளர். அவரைபோலவே கமலும் வருவார் என்று கூறி உள்ளார்.

24JANCHPRSKamaGQ4160C324jpgjpge