கன்னியாகுமரி மாவட்டத்தில் 10 வயது சிறுவன் மருத்துவ செலவுக்காக பிச்சை எடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மார்த்தாண்டம் சந்திப்பையொட்டியில் உள்ள தனியார் மருத்துவமனை முன்பு 10 வயது சிறுவன் ஒருவன் உடைந்த கையில் கட்டுகளுடன் பிச்சை எடுத்துக் கொண்டிருந்தான்.
இதைக் கண்ட அங்கிருந்தவர்கள் உடனடியாக பொலிசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அதன் பின் பொலிசார் சிறுவன் இருக்கும் பகுதிக்கு வந்து, சிறுவனை காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
அப்போது பொலிசார் அவனிடம் விசாரித்த போது, நாகர்கோவில் பள்ளிவிளை பகுதியைச் சேர்ந்தவன் என்றும் கை உடைந்தபோது மருத்துவச் செலவுக்கு பணம் இல்லாததால் முதல்முதலாக பிச்சை எடுத்ததாக கூறியுள்ளான்.
இதைத் தொடர்ந்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகள், சிறுவனுக்கு மருத்துவ செலவு மற்றும் கல்வி செலவைச் செய்வதாகவும், சிறுவனை பள்ளிக்கு அனுப்பி வைக்குமாறும் அறிவுரை கூறி தாயுடன் அனுப்பி வைத்ததாகவும் கூறப்படுகிறது.