கனடாவில் காணாமல் போன மாணவர்கள் இருவர்!! நடந்தது என்ன?

ரொறொன்ரோவில் இரண்டு சீன மாணவர்கள் காணாமல் போய் விட்டதாக அனைவரும் நம்பியிருக்கையில் நடந்தது என்னவென்றால் இவர்கள் காணாமல் போகவில்லை.சீனாவில் இருக்கும் இவர்களது பெற்றோர்களை இலக்கு வைத்து நடாத்தப்பட்ட ஒரு சூழ்ச்சி என தெரியவந்துள்ளது.

கடந்த புதன்கிழமையிலிருந்து ரொறொன்ரோவில் படிக்கும் இரண்டு சீன மாணவர்களான Juanwen Zhang, 20 மற்றும் Ke “Jaden” Xu, ஆகிய இருவரையும் காணவில்லை என அதிகாரிகள் அறிவித்திருந்தனர்.

இந்த விவகாரத்தை ஆராய்ந்து பார்த்ததில் இரண்டு மாணவர்களையும் சந்தேக நபர்கள் தொடர்பு கொண்டு இருவரையும் போன்களை உபயோகிக்கவோ அல்லது சமூக ஊடகங்களுடன் தொடர்பு கொள்ள வேண்டாம் என்றும் மீறி அவர்கள் நடந்து கொண்டால் சீனாவில் இருக்கும் இவர்களது பெற்றோர்களிற்கு ஆபத்து என மிரட்டியுள்ளதாக அதிகாரிகள் நம்புகின்றனர்.

அதே நேரத்தில் அதே சந்தேக நபர்கள் சீனாவில் உள்ள மாணவர்களின் பெற்றோருடனும் தொடர்பு கொண்டுள்ளனர்.

அவர்களிடம் இரு மாணவர்களையும் கடத்தி வைத்திருப்பதாகவும் அவர்களது விடுதலைக்கு மிகப்பெரிய தொகை பணம் தரவேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.

காணாமல் போயுள்ள இரு மாணவர்களின் பாதுகாப்பு குறித்து தாங்கள் கவலை கொள்வதாக விசாரனையாளர்கள் தெரிவித்தனர்.

Zhang 5.4உயரம் 110இறாத்தல் எடை கொண்டவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புதன்கிழமை கடைசியாக யங் மற்றும் கிரென்வில் வீதியில் கிரே நிற ஜக்கெட் கிரே நிற U of T லூசான காற்சட்டை அணிந்து ஒரு பச்சை தோல் பை வைத்திருந்தார்.

Xu 6.1உயரம் மெல்லிய உடல் கட்டையான கறுப்பு முடி பிறவுன் கண்கள். கடைசியாக எக்லிங்ரம் மற்றும் மிட்லன்ட் அவெனியு பகுதியில் வியாழக்கிழமை காலை ஒரு சிவப்பு வின்ரர் கோட் கிரே காற்சட்டை அணிந்து ஒரு கறுப்பு முதுகுப்பையும் வைத்திருந்தார்.

இவர்கள் குறித்த தகவல் தெரிந்தவர்கள் 52 டிவிசன் அல்லது டிவிசன் 41ல் பொலிசாரை அழைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றது.

625.0.560.380.280.600.660.800.668.160.90 (3)

625.0.560.380.280.600.660.800.668.160.90 (2)