அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவும் தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க வும் இரண்டாவது தடவையாக நேருக்குநேர் மூடிய அறைக்குள் சந்தித்துப் பேச்சு நடத்தியிருப்பது அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொழும்பில் அரச தலைவர் மைத்திரிபாலவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்தச் சந்திப்பு சுமார் ஒருமணி நேரத்துக்கும் அதிகமாக நடைபெற்றுள்ளது.
கொழும்பு அரசியலில் உருவாகியுள்ள முக்கிய பிரச்சினைகள் பெற்றோல் தட்டுப்பாடு, பிணைமுறி மோசடி விவகாரம், அரசுக்கு எதிராக ஊடகங்களில் வரும் விமர்சனங்கள் குறித்து இருவரும் கடும் வாதப்பிரதிவாதங்களில் ஈடுபட்டனர் என்று முக்கிய அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிந்தது.
மாதுளுவாவே சோபித தேரரின் நினைவுத் தூபிக்கான அடிக்கல் நடும் விழாவில் கலந்துகொள்ள முன்னரே அரச தலைவர் மைத்திரிபால இந்தச் சந்திப்பை தலைமை அமைச்சர் ரணிலுடன் நடத்தியிருந்தார்.
அந்த நிகழ்வில் அரசின் செயற்பாடுகள் தொடர்பில் கடும் விமர்சனத்தை அரச தலைவர் முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.