லண்டன் ஷாப்பிங் மாலில் தீ விபத்து: நெரிசலில் சிக்கிய மக்கள்!

லண்டனில் உள்ள ஷாப்பிங் மாலில் சிறிய அளவிலான தீ விபத்து ஏற்பட்டதில் அங்கிருந்த மக்கள் நெரிசலில் சிக்கியுள்ளனர்.

பிரித்தானியாவின் தலைநகரான லண்டனின் Stratford-இல் இருக்கும் Westfield பகுதியில் அமைந்துள்ள ஷாப்பிங் மாலின் இரண்டாவது தளத்தில் உள்ளூர் நேரப்படி மாலை 5.15 மணி அளவில் புகை வந்துள்ளது.

இதைக் கண்ட ஒரு சிலர் தீ விபத்து என்று கருதி ஓடியுள்ளனர். ஒரு சிலர் அங்கு பெரிய அளவிலான சத்தம் கேட்கிறது என்று கூறியபடியே ஓடியதால், பொதுமக்கள் பலர் கூட்ட நெரிசலில் சிக்கியுள்ளனர்.

Captureljmikl;.kmjilஇதை அறிந்து பொலிசார் சம்பவ இடத்திற்கு வந்து சோதனை மேற்கொண்ட போது. இது ஒரு சிறிய அளவிலான தீ விபத்து தான் என்றும், இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து பொலிசார் மாலில் இருந்த அனைவரையும் வெளியேற்றி முழுமையாக சோதனை செய்த பின்னரே மக்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.