சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, திடீரென சிங்கப்பூருக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார். கடந்த வியாழக்கிழமை இரவு அவர், சிங்கப்பூருக்கு தனிப்பட்ட பயணத்தை மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன், அனைத்துலக வர்த்தக மற்றும் அபிவிருத்தி மூலோபாய அமைச்சர் மலிக் சமரவிக்கிரமவும், சிங்கப்பூருக்கு சென்றுள்ளார்.
எனினும், இந்தப் பயணத்தின் நோக்கம் வெளியிடப்படவில்லை. நாடாளுமன்றத்தில் வரவுசெலவுத் திட்ட விவாதம் நடந்து கொண்டிருக்கும் நிலையில், சிறிலங்கா பிரதமர் திடீரென சிங்கப்பூர் சென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
அதேவேளை, நான்கு நாட்கள் பயணமாக சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் 21ஆம் நாள் புதுடெல்லிக்குப் பயணம் மேற்கொள்ளவிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.