யாழ்., கொழும்பு மாநகரசபைகளின் உறுப்பினர் எண்ணிக்கை இரட்டிப்பாக அதிகரிப்பு!

யாழ்ப்பாணம், கொழும்பு மாநகரசபைகளுக்குத் தெரிவு செய்யப்பட வேண்டிய உறுப்பினர்களின் எண்ணிக்கை கடந்த முறையை விட இரட்டிப்பாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி சபைகளுக்குத் தெரிவு செய்யப்பட வேண்டிய உறுப்பினர்களின் பற்றிய விபரங்களை உள்ளடக்கிய வர்த்தமானி அறிவிப்பு நேற்று வெளியிடப்பட்டுள்ளது.

parliement (1)இதற்கமைய, எல்லா உள்ளூராட்சி சபைகளுக்குமான உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.

55 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்ட கொழும்பு மாநகரசபைக்கு, இம்முறை 110 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுவர். 23 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்ட யாழ்ப்பாண மாநகரசபைக்கு, 45 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர்.

மட்டக்களப்பு மாநகரசபையின் உறுப்பினர்கள் எண்ணிக்கையும், 19இல் இருந்து, 33 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

மாநகர மற்றும் நகரசபைகள், அவற்றுக்குத் தெரிவு செய்யப்பட வேண்டிய உறுப்பினர்களின் எண்ணிக்கை விபரம் வருமாறு- (அடைப்புக்கள் முன்னர் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களின் எண்ணிக்கை)

மாநகர சபைகள்:

யாழ்ப்பாணம்- 45 (23), மட்டக்களப்பு- 33 (19), அம்பாறை- 16 (9), கல்முனை- 34 (19), அக்கரைப்பற்று- 24 (9), கொழும்பு- 110 (55), தெகிவளை- கல்கிசை- 48 (32), சிறி ஜெயவர்த்தனபுர – 35 (20), கடுவெல- 46 (28), மொறட்டுவ- 48 (29), நீர்கொழும்பு- 48 (26), கம்பகா-  28 (18), குருநாகல- 21 (12), கண்டி- 41 (24), மாத்தளை- 21 (13), தம்புள்ள- 21(15), நுவரெலிய- 21(10), பதுளை- 25 (15), பண்டாரவளை -19 (9), காலி- 35 (19), மாத்தறை- 28 (15), அம்பாந்தோட்டை- 21(12),இரத்தினபுரி- 28 (15) , அனுராதபுர- 25 (13)

நகரசபைகள் :

பருத்தித்துறை- 15 (10), வல்வெட்டித்துறை- 15 (10) , சாவகச்சேரி- 18 (11) , மன்னார்- 15 (7) , வவுனியா- 20 (11) , காத்தான்குடி- 16 (9) , ஏறாவூர்- 16 (9),அம்பாறை- 16 (9) , திருகோணமலை- 23 (12) , கொலன்னாவ- 18 (11), சீதாவாக்கைபுர- 23 (11), மகரகம- 41 (24), பொரலஸ்கமுவ- 16 (10), கெஸ்பேவ- 33 (18), வத்தளை-மாபொல- 16 (09), பேலியகொட- 16 (9), கட்டுநாயக்க-சீதுவ- 18 (9) , மினுவாங்கொட- 15 (11), ஜாஎல- 16 (9), பாணந்துறை- 16 (9) , ஹொரண- 11(9), களுத்துறை- 20 (11), பேருவளை- 16 (9), குளியாப்பிட்டிய- 16 (9), புத்தளம்- 18 (9), சிலாபம்- 20 (11) , வத்தேகம- 15 (9), கடுகண்ணாவ-15 (12) , கம்பொல- 28 (15) , நாவலப்பிட்டிய- 15 (9) , ஹற்றன்-டிக்கோயா- 15 (9), தலவாக்கலை-லிந்துலை 11 (9) , அப்புத்தளை- (9) , அம்பலங்கொட- 20 (13) , ஹிக்கடுவ- 18 (11) , வெலிகம- 18 (11) , தங்காலை- 18 (9) , பலாங்கொட- 16 (9) , எம்பிலிப்பிட்டிய- 13 (7) , கேகாலை- 20 (11)