குடிபோதையில் கார் ஓட்டி விபத்து! ..ஆட்டோ ஓட்டுநர் பலி!

convi_06256சென்னை, தேனாம்பேட்டை கதீட்ரல் சாலையில், ஓரமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த ஆட்டோக்களை சொகுசு கார் இடித்து நொறுக்கியது. இந்த விபத்தில் ராஜேஷ் என்ற ஆட்டோ ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார். மேலும், பல ஆட்டோக்கள் நொறுங்கிய நிலையில், படுகாயமடைந்த நான்கு பேர் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தற்போது, இந்த விபத்தை ஏற்படுத்திய இளைஞரின் புகைப்படம் சிக்கியுள்ளது. காரை தாறுமாறாக ஓட்டிய இந்த இளைஞர் குடி போதையில் இருந்துள்ளார். சனிக்கிழமை இரவு பார்ட்டியை முடித்து விட்டு தனது நான்கு நண்பர்களுடன் அதிவேகத்தில் காரை ஓட்டி வந்துள்ளார் இவர். விபத்து நடந்ததும் உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் இந்த இளைஞரையும், உடன் வந்த நண்பர்களையும் பாதுகாப்பாக அழைத்து சென்றிருக்கின்றனர்.

விபத்து, accident

உயிரிழந்த ராஜேஷின் உடலை ஏற்றுவதற்குகூட ஆம்புலன்ஸ் மறுத்திருக்கிறது. 34 வயதான ராஜேஷுக்கு காயத்ரி என்ற மனைவியும், தமிழ்செல்வன் (வயது 7), தனுஷ் (வயது 4) என்ற இரு குழந்தைகள் உள்ளனர். விபத்தை நேரில் பார்த்த ஆட்டோ ஓட்டுநர் ஜெகதீசன் பேசுகையில், “போலீஸ் உடனே வந்து இவனுங்கள தனியா கூட்டிட்டு போயிட்டங்க. ஒருத்தர கொன்னுட்டோமே-ன்ற பயமே இல்லாம இவனுங்க உக்காந்து சிரிச்சுட்டு இருந்தானுங்க சார்”, எனச் சொல்லி பேரதிர்ச்சியை கிளப்பினார். ராயப்பேட்டை மருத்துவமனையில் கதறியழும் ஆட்டோ ஓட்டுநர் ராஜேஷின் மனைவி குரலை நேரில் நின்று கேட்க முடியவில்லை.