இலங்கையில் அதிரடி சுற்றிவளைப்பு! 4 மணிநேர நேரத்தில் 758 பேர் கைது

பொலிஸார் இணைந்து மேற்கொண்ட அதிரடி சுற்றிவளைப்பில் 758 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என விசேட அறிக்கை ஒன்றின் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

நேற்றிரவு 11 மணியில் இருந்து இன்று அதிகாலை 3 மணி வரை இந்த விசேட சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 758 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

policeநாட்டின் சகல பொலிஸ் பிரிவுகளையும் இணைக்கும் வகையில் 16362 பொலிஸாரின் பங்களிப்புடன் இந்த விசேட சுற்றி வளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது சந்தேகத்தின் பேரில் 962 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், குற்றத்திற்கு அவசியமான 86 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் சட்டவிரோத துப்பாக்கிகள் மூன்றும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

பொலிஸ் மா அதிபரின் உத்தரவு மற்றும் ஆலோசனைகளுக்கமைய செயற்படுத்தப்பட்ட செயற்பாட்டில் போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத மதுபானம் தொடர்பில் 948 சுற்றிவளைப்புகளும், 5744 போக்குவரத்து வழக்குகளும் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.