தமிழரசுக்கட்சி ஆலங்குளம் துயிலுமில்ல குத்தகையினில்!

திருக்கோணமலை ஆலங்குள மாவீரர் துயிலுமில்ல நிகழ்வுகளை தமிழரசுக்கட்சி தனது அரசியல் ஆதாயங்களிற்காக கையிலெடுத்துக்கொண்டுள்ளதாக மாவீரர் குடும்பங்கள் குற்றச்சாட்டுக்களினை முன்வைத்துள்ளது.கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் தண்டாயுத பாணியின் நெருங்கிய உறவினர் சூஜெனார்த்தனன் தலைமையினில் நிகழ்வுகள் இடம்பெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

உப்புவெளி பள்ளத்தோட்ட கருணா குழுவின் அலுவலக பொறுப்பாக முன்னர் இருந்தவரென அடையாளப்படுத்தப்பட்ட ஜெகதீசன்.அங்கு அலுவலக கணக்காளர் சூஜெனார்த்தனன் என அவர்கள் அம்பலப்படுத்தியுள்ளனர்.

20 வது திருத்த சட்ட மசோதா ஆதரிப்புக்கு திருகோணமலைக்கு அன்வர் அலி மூலம் தண்டாயுதபாணியின் உத்தியோக பூர்வ விடுதியில் வைத்து ஆளுக்கு 50 இலட்சம் வழங்கப்பட்டதாகவும் அதை தொடர்ந்தே 20 வது திருத்த சட்டத்திற்க்கு ஆதரவு வழங்கப்பட்டதாகவும் அம்பலப்படுத்தப்பட்டுள்ளது.

இதனிடையே திருக்கோணமலை ஆலங்குள மாவீரர் நிகழ்வு குழு உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளவர்கள் துரோககங்களிலும் போராளிகளை காட்டிக்கொடுப்பதிலும் செயற்பட்டவர்களென தெரிவித்துள்ள மாவீரர் குடும்பங்கள் இவர்கள் அஞ்சலி செலுத்துவது வரலாற்று துரோகமெனவும் எச்சரித்துள்ளனர்.

Capturevfffgg