ஜெயா டிவி அலுவலகத்தில் திணறிய வருமான வரித்துறை அதிகாரிகள்.!!! தோல்வியில் முடிந்த முயற்சி.!!!

சசிகலா குடும்பத்தினர் உள்ளிட்ட அவரது ஆதரவாளர்கள் வீட்டில் தொடர்ந்து நான்காவது நாளாக வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகின்றது.

190 க்கும் மேற்பட்ட இடங்களில் 1800 அதிகாரிகள் நடத்திய இந்த சோதனை அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிலும் குறிப்பாக, ஜெயா தொலைக்காட்சி அலுவலகமும், இளவரசியின் மகன் விவேக்கின் வீடும்தான், வருமான வரித் துறையால் அதிகம் குறிவைக்கப்பட்டு தோண்டித் துருவப்பட்டுவருகின்றன.

ஜெயா தொலைக்காட்சி அலுவலகத்தில் கடந்த மூன்று நாட்களாக வருமான வரித் துறை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்திவருகின்றனர்.

ஜெயா தொலைக்காட்சி அலுவலகத்தில் உள்ள ஒரு அறை மட்டும் இன்னும் திறக்கப்படாமல் இருக்கிறது.

பூட்டப்பட்டு இருந்த அந்த அறையின் சாவியை நேற்று மதியம் அதிகாரிகள் கேட்டிருக்கிறார்கள்.

ஆனால், அங்கு இருந்தவர்கள் ‘அது சசி மேடம் ரூம். அவங்க வரும்போது மட்டும்தான் திறப்பாங்க. மற்ற நேரங்களில் பூட்டியே இருக்கும்’ என்று சொல்லி இருக்கிறர்கள்.

இது சம்மந்தமாக, விவேக்கை அழைத்து அதிகாரிகள் விசாரித்து இருக்கிறார்கள்.

அதற்க்கு விவேக், இது அவங்களோட பர்சனல் ரூம். அவங்க இங்கு வரும்போது மட்டும்தான், நானே இந்த ரூமுக்குள் போயிருக்கேன்.

அந்த ரூம் சாவி எங்களிடம் இல்லை. அடிஷனல் கீ, மாஸ்டர் கீ என்று அனைத்தும் சின்னம்மாகிட்டதான் இருக்கு.

ஒருவேளை, போயஸ் கார்டனில் அந்த சாவி இருக்கிறதா என்று தேடி பாருங்கள் என்று விவேக் கூறியிருக்கிறார்.

போயஸ் இல்லத்தில் சோதனையில் இருந்தவர்களுக்கு இந்தத் தகவலைச் சொல்லி, அங்கே சாவியைத் தேடச் சொல்லியிருக்கிறார்கள்.

கார்டனில் தேடியதிலிருந்து, ஒரு பெட்டி நிறைய சாவிக் கொத்துகளை அதிகாரிகள் அள்ளிக்கொண்டு, ஜெயா தொலைக்காட்சி அலுவலகத்திற்கு வந்த அதிகாரிகள், ஒவ்வொரு சாவியாகப் போட்டு திறந்து பார்த்திருக்கிறார்கள். ஆனால், எதுவும் திறக்கவில்லை

உடனே ,இது சம்பந்தமாகத் தங்கள் உயர் உயர் அதிகாரிகளை தொடர்புகொண்டு வருமான வரித் துறை அதிகாரிகள் பேசியிருக்கிறார்கள்.

சசிகலா அறையை உடைக்கலாமா என்றும் ஆலோசனை நடந்திருக்கிறது.

ஆனால், வருமான வரித் துறை உயரதிகாரி ஒருவரோ, ‘வேண்டாம்… சாவி எங்கே இருக்கு என்பதை மட்டும் கேட்டு வாங்குங்க… எந்தக் காரணத்துக்காகவும் உடைக்க வேண்டாம்…’ எனச் சொல்லிவிட்டாரம்.

சசிகலாவிடம் இதுபற்றி விசாரிக்கலாமா எனவும் ஆலோசித்து இருக்கிறார்கள்.

‘சசிகலா ஏற்கெனவே குற்றம் நிரூபிக்கப்பட்டு சிறையில் இருக்கும் கைதி. அவர் எந்த அளவுக்கு நமக்கு ஒத்துழைப்பு கொடுப்பார்? ’என்ன வேண்டுமானாலும் செஞ்சுக்கோங்க’ என்று சொல்லிட்டாங்கன்னா, நாம என்ன செய்ய முடியும்…’ என்றும் அந்த டிஸ்கஷனில் பேசியிருக்கிறார்கள்.

அதனால், பூட்டப்பட்ட அந்த அறையின் கதவு இன்று வரை திறக்கப்படாமலே இருக்கிறது”.

இந்த விவகாரம் டெல்லி வரைக்கும் போய்விட்டதாம். இனி என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.