வடக்கில் தமிழர்கள் சிலர் சித்திரவதைகளுக்கு உள்ளாகியுள்ளதாக வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் கருத்து வெளியிட்டுள்ளார்.
இலங்கையில் சில தமிழர்கள் படையினரால் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டதுடன், பாலியல் துஸ்பிரயோகத்துக்கும் உட்படுத்தப்பட்டதாக செய்தி சேவையொன்று செய்தி வெளியிட்டிருந்தது.
இது தொடர்பில் குறித்த செய்திசேவையொன்றுக்கு எழுதியுள்ள கடிதத்திலேயே வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, ஏற்கனவே இந்த சம்பவங்கள் குறித்து நீதியான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்று தான் வலியுறுத்தியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.