ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சிறிது நேரம் காலிமுகத்திடல் மைதானத்தில் மரம் ஒன்றில் ஓய்வாக அமர்ந்து மக்களுடன் கலந்துரையாடியுள்ளார்.
இதன்காரணமாக மக்கள் மத்தியில் ஜனாதிபதி பெரும் வரவேற்பை பெற்றுள்ளதுடன், மக்களின் பாராட்டினையும் பெற்றுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இந்த எளிமை போக்கு மக்களை வெகுவாக கவர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இதனிடையே கொழும்பு காலி முகத்திடலில் இன்றைய தினம் தேசிய நீரிழிவு தின நடைப் பயணம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் அமைச்சர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
சர்வதேசத்தின் மத்தியிலும், இலங்கை மக்களுக்கு மத்தியிலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எளிமையான ஒருவர் என்ற கருத்து காணப்படுகின்ற நிலையில் மக்கள் மத்தியில் அவர் சிறப்பான ஒரு இடத்தையும் பெற்றுள்ளதாக அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை கடந்த மாதம் 26ஆம் திகதி கட்டாருக்கு இரண்டு நாள் அரச முறை பயணம் மேற்கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோருடன் ஒரு கட்டடத்திற்கு வெளியில் அமர்ந்து சாதாரணமாக பேசிக்கொண்டிருந்தமை அனைவரது கவனத்தையும் ஈர்த்திருந்தமை குறிப்பிடத்தக்கது.