மகிந்தவை வியக்க வைத்த யாழ் இளைஞன்!

யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞன் ஒருவரின் செயற்பாடு கண்டு, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச வியந்து போனதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

டீ.ஏ.ராஜபக்சவின் நினைவு தினம் கடந்த வாரம் தங்காலையில் இடம்பெற்றது. இதில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உள்ளிட்ட குழுவினர் கலந்து கொண்டனர்.

குறித்த நினைவு தின நிகழ்வில் மகிந்தவின் அரசியல் வேலைகளை முன்னெடுக்கும் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

அந்த இளைஞன் டீ.ஏ.ராஜபக்சவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் தங்காலைக்கு சென்றுள்ளார். இதனை அவதானித்த மகிந்த குறித்த இளைஞனை அழைத்து, யாழ்ப்பாணத்திலிருந்து வந்தமைக்கு மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

அத்துடன், யாழ். இளைஞனை அஞ்சலி நிகழ்வில் கலந்து கொள்ள அனுமதிக்குமாறும் உத்தரவிட்டுள்ளார்.

கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது தமிழ் மக்களின் வாக்குகள் மகிந்தவின் தோல்விக்கு காரணமாக அமைந்திருந்தது.

இந்நிலையில் டீ.ஏ.ராஜபக்சவின் அஞ்சலி நிகழ்வில் தமிழ் இளைஞன் கலந்து கொண்டமை குறித்து மகிந்த மகிழ்ச்சி அடைந்ததாக குறித்த ஊடகம் மேலும் தகவல் வெளியிட்டுள்ளது.

blogger-image--934052410