வவுனியாவில் தமிழ் அரசுக் கட்சியின் முக்கிய கூட்டம்!

சிறிலங்காவில் உள்ளூராட்சித் தேர்தல்கள் நடைபெறவுள்ள நிலையில், இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மத்திய செயற்குழு வவுனியாவில்  கூடி ஆலோசனைகளை நடத்தியுள்ளது.

வவுனியாவில் இன்று காலை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா தலைமையில் ஆரம்பமான கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பாகவும், இடைக்கால அறிக்கை தொடர்பாகவும், இந்தக் கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மன்னார் ஆயர் கிங்ஸ்லி சுவாம்பிள்ளை தலைமையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கிடையில் நேற்று மன்னாரில் ஒரு கலந்துரையாடல் நடத்தப்பட்டதன் பின்னர் இந்தக் கூட்டம் இடம்பெற்றுள்ளது.

நேற்றைய கூட்டத்தில் உள்ளூராட்சித் தேர்தலில் கூட்டமைப்பின் அனைத்துக் கட்சிகளும் இணைந்து போட்டியிடுவது குறித்து கலந்துரையாடப்பட்ட போதிலும், அதற்கு ஈபிஆர்எல்எவ் இணக்கம் தெரிவிக்கவில்லை.

இந்த நிலையில் தற்போது எழுந்துள்ள புதிய அரசியல் சூழல் குறித்தும், உள்ளூராட்சித் தேர்தலுக்காக வியூகங்கள் தொடர்பாகவும் தமிழ் அரசுக் கட்சி விரிவாக ஆலோசனை நடத்தியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

Capturexdcvdxvxd