வருமான வரித்துறையினர் சோதனையின் போது, பெங்களூருவில் சசிகலாவின் ஆதரவாளர் புகழேந்தி வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது.
அப்போது ஜெயலலிதாவின் அப்பல்லோ மருத்துவமனை சிகிச்சை சிடியை வெளியிடுவதாக அறிவித்தீர்களே? அது எங்கே இருக்கிறது? என கேட்டுள்ளனர்.
சசிகலா குடும்பத்தாரின் சொத்துக்குவிப்பை பற்றியும் அவர்களது பினாமிகளை கண்டறிய வந்த வருமான வரித்துறை அதிகாரிகள் அதற்கு போதிய கவனம் செலுத்தவில்லை.
மாறாக ஜெயலலிதாவின் சொத்துகள் பற்றியும், அவரது கடைசி உயில் பற்றியும், அப்பல்லோ மருத்துவமனை சிகிச்சை சிடி பற்றியும் அதிக அக்கறை கொண்டு விசாரித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையெல்லாம் வைத்து பார்க்கும் பொழுது சசிகலா குடும்பத்தாரை வருமான வழக்கில் மட்டுமல்லாமல், குற்றவியல் வழக்கிலும் சிக்க வைக்கவே சோதனை நடத்தப்பட்டிருக்கிறது.
இதன் மூலமாக சசிகலாவையும், தினகரனையும் அரசியலில் இருந்தே ஒழித்து கட்டுவதற்காக இந்த சோதனை வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
இந்த மெகா சோதனையில் மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் ரகசிய கூட்டு இருக்கிறது என கூறப்படுகிறது.
வருமான வரித்துறை அதிகாரிகளின் இந்த போக்கும், விசாரணை முறையும் மெகா சோதனைக்கு உண்மையான பின்னணி என்ன? என்று பலரும் புருவத்தை உயர்த்தி உள்ளனர்.
இந்த நிலையில் தான், ஜெயலலிதா மருத்துவ சிகிச்சையின் போது அவர் கேட்டுக் கொண்டதன் பேரில் எடுக்கப்பட்ட வீடியோ என்னிடம் தான் இருக்கிறது.
வருமான வரி சோதனையின் போது, அதையாரும் எடுத்துச் செல்லவில்லை. அதை எடுத்து செல்வதற்காக இந்த சோதனை நடத்தப்பட வில்லை.
விசாரணை ஆணையத்தில் கேட்டால் அந்த வீடியோ பதிவை கொடுக்கப்போகிறேன். ஆனால் அதை வெளியிடக் கூடாது என்ற நிபந்தனைகள் வைத்து கொடுக்க தயாராக இருக்கிறேன்’ என்று தினகரன் நேற்று முன்தினம் பேட்டியளித்தார்.
பேரம் பணியவே சோதனையின் நாட்கள் நீட்டிக்கப்பட்டதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகின்றது.