இராஜகிரிய பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தின் போது சம்பவத்துடன் தொடர்புடைய வாகனத்தைச் செலுத்திய பாடசாலை மாணவனின் சாரதி அனுமதிப்பத்திரம் இதுவரை பொலிஸாரிடம் சமர்ப்பிக்கப்படவில்லை என்பதுடன் 3 மாணவர்களின் நிலை தொடர்ந்தும் கவலைக்கிடமாக இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
இராஜகிரிய பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தின் போது சம்பவத்துடன் தொடர்புடைய வாகனத்தைச் செலுத்திய பாடசாலை மாணவனின் சாரதி அனுமதிப்பத்திரம் இதுவரை பொலிஸாரிடம் சமர்ப்பிக்கப்படவில்லை என்பதுடன் 3 மாணவர்களின் நிலை தொடர்ந்தும் கவலைக்கிடமாக இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
இராஜகிரிய, சில்வா குறுக்குவீதியில் நேற்றுக் காலை குறித்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கெப் ரக வாகனம் ஒன்று மதில் ஒன்றின் மீது மோதி விபத்துக்குள்ளானதில் குறித்த வாகனத்தில் பயணித்த கொழும்பு ரோயல் கல்லூரியில் உயர்தரத்தில் கல்வி கற்கும் மாணவர் ஒருவர் உயிரிழந்தார்.
மேலும் 9 மாணவர்கள் காயமடைந்துள்ள நிலையில், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர்களில் நால்வரது நிலை கவலைக்கிடமாக உள்ளதாக நேற்று பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த கெப் ரக வாகனம் வேகக் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
இதேவேளை, குறித்த கெப் ரக வாகனத்தை தொடர்ந்து பயணித்த சிறிய ரக வாகனமொன்றும் மதிலில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த வானத்தையும் மாணவரகளே செலுத்திச் சென்றுள்ளமை சி.சி.ரிவி. காணொளி மூலம் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், விபத்துடன் தொடர்புடைய கெப் ரக வாகனத்தைச் செலுத்திய சாரதியான பாடசாலை மாணவரின் சாரதி அனுமதி பத்திரம் இதுவரை பொலிஸாரிடம் சமர்ப்பிக்கப்படவில்லை.
காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சைபெற்றுவரும் குறித்த விபத்துடன் தொடர்புடைய கெப் ரக வாகனத்தைச் செலுத்திய மாணவன் தன்னிடம் சாரதி அனுமதி பத்திரம் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இதேவேளை, சிகிச்சைபெற்றுவரும் 9 மாணவர்களில் 3 மாணவர்களின் நிலை கவலைக்கிடமான நிலையில் தீவிரசிகிச்சைப் பிரிவில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதுதொடர்பாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அலுவலகத்தின் அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில்,
பாடசாலையில் நேற்று நடைபெறவிருந்த ஊடக விழாவுக்கான ஏற்பாடுகளை நேற்று முன்தினமிரவு மேற்கொண்டுவிட்டு சென்ற போதே ராஜகிரிய பகுதியில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கொழும்பு ரோயல் கல்லுரி மாணவர்கள் 10பேர் பயணித்த டபல் கெப் ரக வாகனம் நேற்று அதிகாலை 1. 50மணியளவில் ராஜகிரிய சில்வா மாவத்தையில் விபத்துக்குள்ளாகியுள்ளது. மாணவர்கள் நிகழ்வொன்றில் கலந்துகொண்டுவிட்டு வீட்டுக்கு திரும்பும்போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
ராஜகிரிய சில்வா மாத்தைக்கு அருகில் மொரகஸ் முல்லயில் இருந்து ராஜகிரிய நோக்கி பயணித்த வாகனத்தை செலுத்தி வந்த மாணவனுக்கு அந்த இடத்தில் இருந்த வலைவில் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் அருகில் இருந்த வீடொன்றின் மதிலில் மோதியுள்ள நிலையில் வாகனம் விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தில் உயர்தர வகுப்பில் கல்வி கற்றுவரும் கல்கிசையைச்சேர்ந்த அமான் கிசன் மொஹமட் அமான் கிசில் என்ற 18வயது என்ற மாணவன் உயிரிழந்துள்ளதுடன் வாகனத்தில் இருந்த 9பேர் காயமடைந்ததுடன் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் அவர்களில் 3பேர் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
இதேவேளை, இந்த கெப் வாகனத்துக்கு பின்னால் வந்த மற்றுமொரு கார் இந்த மதிலில் மோதியதில் வாகனத்தின் சாரதி காயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுளார். விபத்து தொடர்பாக வெலிக்கடை பொலிஸார் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
விபத்தில் உயிரிழந்த ரோயல் கல்லூரியின் உயர்தர வகுப்பு மாணவனின் . இறுதி கிரியை நேற்று இரவு நடைபெற்றது.தெஹிவளை மையவாடியில் ஜனாசா நல்லடக்கம் செய்யப்பட்டது. சம்பவத்தில் காயமடைந்தவர்களில் இருவர் 9ஆம் ஆண்டு மாணவர்களாவர்.
விபத்தையடுத்து ரோயல் கல்லூரியில் நேற்று நடைபெறவிருந்த ஊடக விழா இலக்கிய விழா என்பன பிற்போடப்பட்டுள்ளன. இன்று நடைபெறவிருந்த நூல் வெளியீட்டு விழாவும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.