ஜப்பானிய பிரதமருடனான உத்தியோகபூர்வ பைவத்தில் குட்டைப் பாவாடையுடன் தோன்றியதால் சர்ச்சையில் சிக்கிய இவான்கா ட்ரம்ப்

ஜப்பானிய பிரதமருடனான உத்தியோகபூர்வ பைவத்தில் குட்டைப் பாவாடையுடன் தோன்றியதால் சர்ச்சையில் சிக்கிய இவான்கா ட்ரம்ப்

அமெரிக்க ஜனாதிபதியின் மகளான இவான்கா ட்ரம்ப், ஜப்பானிய பிரதமருடன் நிகழ்வொன்றில் பங்குபற்றியபோது பொருத்தமற்ற வகையில் ஆடையணிந்திருந்தார் என விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

36 வயதான இவான்கா ட்ரம்ப், ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் மூத்த மகளாவார். தற்போது ட்ரம்ப் நிர்வாகத்தில் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரர் எனும் சம்பளமற்ற பதவியை வகிக்கிறார்.

ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் ஜப்பானிய விஜயத்துக்கு முன்னோடியாக இவான்கா ட்ரம்ப்பும் ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டார்.

கடந்த வெள்ளிக்கிழமை டோக்கியோ நகரில் நடைபெற்ற பெண்களுக்கான உலக அரங்கம் 2017 (WAW 2017) எனும் நிகழ்வில் ஜப்பானியப் பிரதமர் ஷின்ஸோ அபேவுடன் இவான்கா ட்ரம்ப் பங்குபற்றினார்.

இந்நிகழ்வில் குட்டைப் பாவாடையை இவான்கா ட்ரம்ப் அணிந்திருந்ததை சிலர் விமர்சித்துள்ளனர். உத்தியோகபூர்வ நிகழ்வொன்றில் பங்குபற்றும்போது இந்த ஆடையை அணியலாமா என சமூக வலைத்தளங்களில் சிலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

Ivanka-Trump-fashion  ஜப்பானிய பிரதமருடனான உத்தியோகபூர்வ பைவத்தில் குட்டைப் பாவாடையுடன் தோன்றியதால் சர்ச்சையில் சிக்கிய இவான்கா ட்ரம்ப் Ivanka Trump fashion‘இது தொழில்சார் பெண் ஒருவருக்குடைய ஆடையல்ல’ என அவர்கள் கூறுகின்றனர்.

வர்த்தகரான ஜெராட் குஷ்னரை 2009 ஆம் ஆண்டு திருமணம் செய்த இவான்கா ட்ரம்ப், 3 பிள்ளைகளின் தாய் ஆவார்.

இவான்கா ட்ரம்ப் முன்னர் பெஷன் மொடலாக பணியாற்றியவர். சஞ்சிகைகளின் அட்டைப்படங்களுக்கும் அவர் போஸ் கொடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Ivanka-Trump-fashion  ஜப்பானிய பிரதமருடனான உத்தியோகபூர்வ பைவத்தில் குட்டைப் பாவாடையுடன் தோன்றியதால் சர்ச்சையில் சிக்கிய இவான்கா ட்ரம்ப் Ivanka Trump fashion1