பழிவாங்கப்படுகின்றதா அல்லது பலிகொடுக்கப்படுகின்றதா எதுவும் அறியாத பிள்ளைகள் ஏன் அநாதைகளாக்கப்படுகின்றனர். முதல் 33 வயதிற்குள் குடுபத்தினர் உயிரிழக்கின்றனர். அமானுஷ்யம் என சிலர் சொல்கின்றனர் ஆனால் ஒரே குடும்பத்தில் ஏன் இத்தனை சம்பவங்கள்… உயிர் பலி தொடர்கின்றது…. எமது செய்திக்குழுவிற்கு காத்திருந்த அதிர்ச்சி சம்பவங்களை நீங்களும் அறிந்துக்கொள்ள தயாராகுங்கள்.
இலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க இடமான தம்புள்ளையிலிலிருந்து சுமார் 47.2 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ளது மெல்சிரிபுர எனும் பிரதான நகரம், அங்கிருந்து சில கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ள நகரமே பள்ளியத்த. அண்மையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த தம்பதியினர் வாகன விபத்தொன்றில் உயிரிழந்தமையினால் அவர்களின் பிள்ளைகள் மூவரும் நிர்கதியாகினர்.
குறித்த பிள்ளைகளின் எதிர்காலம் தொடர்பில் ஆராயவே எமது செய்தி பிரிவு சம்பவ இடத்திற்கு விரைந்தது. இதன்போது அவர்களின் உறவினர்கள் கூறும் சம்பவங்கள் எம்மை பிரமிக்க வைத்துள்ளது. ஒரே குடும்பத்தை சேர்ந்த இரு பரம்பரையினரின் வம்சாவளியினரே இவ்வாறு 30 அல்லது 33 வயதிற்குள் உயிரிழக்கின்றனர்’ இந்த கிராமத்தில் பல வருடங்களுக்கு முன்னர் சகோதரிகள் இருவர் வாழ்ந்து வந்துள்ளனர். பல திறமைகளையும் ஆற்றல்களையும் கொண்ட அவர்கள் அனைத்திலும் சாதிக்கும் திறமையும் கொண்டிருந்தனர். அவர்களுக்கு திருமணம் பருவம் வந்ததும் பெற்றோர் அவர்களை திருமணம் செய்து வைத்துள்ளனர். குறித்த சகோதரிகள் இருவரும் குடும்ப வாழ்க்கையை செவ்வனே நடத்திச்சென்ற தருணத்தில், அவர்கள் இருவருக்கும் மூன்று பிள்ளைகள். மகிழ்ச்சியில் வாழ்ந்துக்கொண்டிருந்த சகோரிதரிகள் இருவரும் இனம்கண்டுக்கொள்ள முடியாத கொடிய நோயினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர்.
இவர்களை மரணம் தழுவுகையில் ஒருவருக்கு 32 வயதும் பிரிதொரு சகோதரிக்கு 33 வயதிற்கு சில மாதங்களே காணப்பட்டன. இவர்கள் உயிரிழப்பினை தொடர்ந்து அவர்களின் கணவர்களில் ஒருவர் 32 வயதினையும் பிரிதொருவர் 33 வயதினையும் கடந்த பின்னர் மன நோயினால் பாதிக்கப்பட்ட நிலையில் மரணிக்கின்றனர். அநாதைகளாக்கப்பட்ட குறித்த சகோதரிகள் இருவருரின் பிள்ளைகளையும் உறவினர்கள் வளர்த்து அவர்களுக்கு திருமணம் செய்து வைக்கின்றனர். இந்நிலையில், திருமணம் நடைபெற்ற ஒரு சகோதரியின் புத்திரன் 33 வயதில் விபத்தொன்றினால் மரணத்தை தழுவிக்கொள்ள அவரின் மனைவி 3 பிள்ளைகளுடன் அநாதையாக்கப்படுகின்றார்.
உயிரிழந்தவரின் சகோதரி தனது பிள்ளைகளை பாடசாலையிலிருந்து அழைத்து வருவதற்காக கணவருடன் சென்ற வேளையில், அவர்களும் வாகன விபத்தினால் சம்பவ இடத்திலேயே உயிரிழக்கின்றனர். அவர்களின் மூன்று பிள்ளைகளும் தற்பொழுது உறவினர் அற்ற உயிர்களாக நிர்கதியாக்கப்படுகின்றனர். இந்த குடும்பத்தில் 32 மற்றும் 33வயதுடைய கைம்பெண்கள் (விதவைகள்) இருவரே எஞ்சியுள்ளனர். அவர்களும் மனநோயினால் பாதிக்கப்பட்டவர்கள் என வைத்தியர்களால் சான்றிதழ்ப்படுத்தப்பட்டவர்களாவர். எனினும் குறித்த குடும்பத்தில் எஞ்சியிருக்கும் ஏனைய அனைவரும் 30 வயதை கடந்தவுடன் மிகவும் அச்சத்தில் வாழ்ந்து வருவதாகவும், இதனை சீர் செய்ய ஏதேனும் வழி கிடைக்காதா என தேடிக்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர். இது கற்பனையல்ல நிஜம்.