சிங்கப்பூரில் மதுபோதையில் இருந்த இளம்பெண்ணை கற்பழித்த நபருக்கு அந்நாட்டு நீதிமன்றம் 13 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
சிங்கப்பூரில் உள்ள Hume Heights நகர் நிறுவனம் ஒன்றில் 22 வயதான இளம்பெண் ஒருவர் பணிபுரிந்து வந்துள்ளார்.
அலுவலகத்தில் பணிபுரிந்த ஊழியர் ஒருவர் வெளிநாடு செல்ல இருந்ததால் அவர் இரவு விருந்து ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார்.
இந்த விருந்து நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட அந்த இளம்பெண் அளவுக்கு அதிகமாக மது அருந்தியுள்ளார்.
மேலும், இந்நிகழ்ச்சியில் Ong Soon Heng(40) என்ற நபரும் பங்கேற்றுள்ளார்.
இந்நிலையில், மதுபோதையில் இருந்த இளம்பெண்ணிடம் பேச்சுக்கொடுத்த நபர் அவரை தனது காருக்கு அழைத்துச்சென்றுள்ளார்.
அப்போது, போதை தலைக்கேறியதால் இளம்பெண் மயக்கமுற்றுள்ளார்.
காரின் பின் இருக்கையில் இளம்பெண்ணை கிடத்திவிட்டு தனது வீட்டிற்கு அவரை தூக்கிச்சென்று இரவு முழுவதும் கற்பழித்துள்ளார்.
மறுநாள் காலை நேரத்தில் இளம்பெண்ணான தனது காதலியை தேடிய வாலிபர் ஒருவர் Find My iPhone என்ற ஆப் மூலம் அவர் இருந்த இடத்தை கண்டுபிடித்து மீட்டுள்ளார்.
கடந்த 2014-ம் ஆண்டு நிகழ்ந்த இச்சம்பவம் தொடர்பான டி.என்.ஏ பரிசோதனையில் இளம்பெண்ணை கற்பழித்தது ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டது.
இவ்வழக்கின் இறுதி வாதம் இன்று நீதிமன்றத்திற்கு வந்தபோது, குற்றவாளிக்கு 13 ஆண்டுகள், 6 மாதங்கள் சிறை தண்டனையும் 12 சவுக்கடியும் வழங்க வேண்டும் எனக் கூறி நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
எனினும், நீதிமன்றத்தின் இத்தீர்ப்பினை எதிர்த்து மேல்முறையீடு செய்ய உள்ளதாக குற்றவாளியின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.